Friday, 20 February 2015

குஷ்புவுக்கு எதிராக சாட்சி ரெடி!! வழக்கு 23ம் தேதி!!


நடிகையும் காங்கிரஸ் உறுப்பினருமான குஷ்பு மீதான, வழக்கில் சாட்சிகள் தயாராகி விட்டன. இவ்வழக்கிற்கான விசாரனை வரும் பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு வெளியான நகரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகை குஷ்பு, ருத்ராட்ச மாலையில் தாலி அணிந்து வந்தார். அப்போது, இது பெரிய விஷயமாக தெரியவில்லை.
எவரும் இதை கண்டுகொள்ளவில்லை. சுமார் 4 வருடங்கள் கழித்து, இந்த இசை வெளியீட்டு விழாவில் எடுத்த புகைப்படம் வார இதழ் ஒன்றில் வெளியானது. இதைக் கண்ட இந்து அமைப்பினர், ருத்ராட்சம் என்பது முனிவர்களும், துறவிகளும் அணிவது.
நடிகை குஷ்பு அதை அணிந்து, இந்து மதத்தை களங்கப்படுத்துகிறார், என்று தெரிவித்தனர். இதற்கு குஷ்பு, முதலில் அது என் தாலி, அப்படி இப்படி என்று சொல்லி சமாளித்தார். ஆனால், அவருக்கு எதிரான போராட்டம் ஓய்வதாகத் தெரியவில்லை.
கடைசியில், மன்னிப்பும் கேட்டார். ஆனால், அதற்குள்ளாகவே அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. கடந்த, ஜனவரி 9ஆம் தேதி இந்து மக்கள் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் பாலா என்பவர், கும்பகோணம் 2வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் குஷ்புவுக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவில், நடிகை குஷ்பு திருமாங்கல்யத்துடன் ருத்ராட்ச மாலையை அணிந்தது, ஆகம விதிகளுக்கு முரணானது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி சரவணபவன், மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த ஆகம விதிகள் பற்றிய ஆவணங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் பேரில், பாலா, பெரிய புராணம், திருவாசகம் மற்றும் சைவ சமய நெறி, மற்றும் ருத்ராட்ச மாலை அணிந்து கொள்ளும் முறை பற்றிய தகவல்கள் கொண்ட புத்தகங்களை சாட்சி ஆவணங்களாக தயார் செய்து நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

No comments:

Post a Comment