நீங்கள் என்றாவது உங்கள் கணினி நீங்கள் டைப் செய்வதை திரும்பக் கூறி கேட்டிருக்கின்றீர்களா??
அப்படி கூறினால் எப்படி இருக்கும்?? என்று எப்பொழுதாவது யோசித்திருந்தால் உங்களுக்கு தான் இந்த ட்ரிக்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ப்ரோக்ராம் மூலம் நீங்கள் டைப் செய்வதை கணினி திரும்பப் பேசும்.
முதலில் ஒரு நோட்பேடை ஓபன் செய்யவும்.
இந்த ப்ரோக்ராமை அதில் பேஸ்ட் செய்யவும்.
*****************************************************************
Dim Message, Speak
Message=InputBox("Enter text","Speak")
Set Speak=CreateObject("sapi.spvoice")
Speak.Speak Message
***********************************************
பின்னர் இதனை Save As ஆப்ஷன் சென்று ’Speak.vbs’ என்று Save செய்யவும்.
தற்போது அதனை ஓபன் செய்தால் ஒரு டயலாக் பாக்ஸ் ஓபன் ஆகும்.
அதில் நீங்கள் என்ன டைப் செய்து ‘ஒகே’ கொடுத்தாலும், உங்கள் கணிப்பொறி அதனை திரும்பக் கூறும்.

No comments:
Post a Comment