கெளதம் மேனன் படங்கள் என்றால் ரொமன்ஸ் பற்றி சொல்ல தேவையில்லை.. கண்களே காதல் காவியமாக பேசும். ஒவ்வொரு சீன்களிலும் காதலை உருகி காட்டுவதாகட்டும், மற்ற படங்களை விட வேறுபடுத்தி காட்டுவதாகட்டும் கெளதம் மேனனை தவிர வேற யாரும் இல்லை என்று சொல்லலாம்.
இவருடைய ஒவ்வொரு படங்களிலும் காதல் ரொமன்ஸ்கள் எல்லோரிடமும் கவிதை பாடும். ரசிகர்கள் எல்லோரும் எப்படி கெளதம் மேனன் இப்படி யோசிக்கிறார் என்று கூட நினைத்ததுண்டு. வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், என்னை அறிந்தால் என கௌதமின் ஒவ்வொரு படத்திலும், காதல் காட்சிகள் பெரிதும் பேசப்படும்.
அதுவும் வேட்டையாடு விளையாடு படத்தில் கமல், கமாலினி முகர்ஜியை பார்த்ததும் தன்னுடைய காதலை சொல்லுவார். அதற்கு அவர், என்ன பார்த்ததும் காதலா என்று கேட்பார். உடனே கமல் பார்த்த ரெண்டு செகண்ட்லையே சொல்லி இருப்பேன். ஆனால் உடனே சொல்லக்கூடாதுனு தான் அரை மணி நேரம் வெயிட் பண்ணினேன் என்று சொல்லுவார். இந்த காட்சி ரசிகர்களிடையே இன்னும் பேசப்பட்டு வருகிறது.
இப்படி கெளதம் மேனன் ஒவ்வொரு படத்திலும் காட்டும் ரொமன்ஸ்களும், காதல் வசனங்களும் அவருடைய சொந்த வாழ்வில் சந்தித்த காதல்களாம். இது குறித்து வார இதழ் ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது :-
'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்', 'விண்ணைத் தாண்டி வருவாயா'... இந்தப் படங்களில் ஹீரோ, ஹீரோயின் பேசுற பல வசனங்கள் நான் என் லைஃப்ல பார்த்த விஷயங்கள்தான். அதுல என் மனைவி ப்ரீத்தி பேசினது, அப்பா, அம்மாவைக் காதலித்த விஷயங்கள்னு எல்லாமே என்னைப் பாதித்த விஷயங்கள். என் உறவினர்கள் படம் பார்க்கிறப்ப, 'என்னது... இதெல்லாம் நம்ம வீட்ல பேசினதாச்சே. அதை அதே ஸ்டைல்ல பயன்படுத்தியிருக்கானே'னு சொல்வாங்க.
'வி.டி.வி' படத்தில் 'ஓமணப்பெண்ணே' பாட்டு சிச்சுவேஷன், என் லைஃப்ல நடந்த விஷயம்தான். இப்படி ஒவ்வொரு படங்களிலும் சில முக்கிய சீன்கள் என் லைஃப்பில் நடந்த விஷயம் தான். நீதானே என் பொன் வசந்தம் படத்தின் கதையும் என்னுடைய காதல் கதைதான் என்று கூறினார் கெளதம்.

No comments:
Post a Comment