இந்த காலத்து இளைஞர்களது வாழ்வில் சமூக வலைதளங்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றன. ஃபேஸ்புக் டுவிட்டரில் பெரிய ஆள் என்று காட்டுவதற்காக எந்த நிலைக்கும் செல்ல இளைஞர்கள் துனிந்து விட்டனர்.
இவ்வாறு, ஃபேஸ்புக்கில் தான் பெரிய ஆள் என்று காட்டுவதற்காக நிறைய லைக்ஸ் வாங்க நினைத்து ஏடாகோடமாக செய்து, கைதாகி இருக்கிறார் ஒரு இளைஞர். ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பைசல் ஷேக் என்ற 24 வயது இளைஞர்.
இவருக்கு ஃபேஸ்புக்கில் அதிக லைக்ஸ் வாங்க வேண்டும் என்று ஆசை. இதற்காக, ஹைதராபாத் நேரு விலங்கியல் பூங்காவிற்குச் சென்று வித விதமாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்துள்ளார்.
போட்டோக்கள் எல்லாமே வழக்கமாக இருக்கவே, வேறு ஏதாவது வித்தியாசமக செய்ய விரும்பியுள்ளார். உடனே அவரது கண்ணில் ஒரு ஆமை தென்பட்டது. பார்வைக்காக, வைக்கப்பட்டிருந்த அது, தடுப்புச் சுவரினுள் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.
சுற்றும் முற்றும் பார்த்த பைசல், உள்ளே இறங்கி ஆமையின் முதுகில் ஏறி நின்று கொண்டு போட்டோ எடுத்துள்ளார். இதை, ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இந்த போட்டோவுக்கு லைக்ஸ் அள்ளியது.
அதோடு, 120 வயதான ஆமை மீது இளைஞர் ஏறி நின்று புகைப்படம் எடுத்ததாக செய்தியும் தீயாகப் பரவியது. போலீஸாரிடம் இந்த செய்தி, புகைப்படத்துடன் சிக்கியது. உடனே, பைசிலின் ஃபேஸ்புக் தகவல்களை வைத்து அவரைத் தேடிக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர் போலீசார்.
கடந்த 2014 மே மாதம் நடந்த இச்சம்பவத்தின் புகைப்படம், கைதான கதையோடு சேர்த்து இன்னமும் ஃபேஸ்புக்கில் உலவிக் கொண்டு இருக்கிறது.

No comments:
Post a Comment