Friday, 20 February 2015

அஜித், விஜய்யை வச்சு இப்படி செஞ்சிட்டிங்களேமா..?


இந்த படத்தின் டீஸரையா இவ்வளவு பேர் பார்த்திருக்காங்க என்ற அளவுக்கு ஆச்சரிய பட வைத்துள்ளது ’இவனுக்கு தண்ணில கண்டம் படம்’. பெரிய ஹீரோ இல்ல.. பெரிய இயக்குநர் இல்ல.. பெரிய டீமும் இல்ல.. அப்புறம் எப்படி இவ்வளவும் பேர் பார்த்திருக்காங்க.. எல்லாம் ஹோஸ்ட் கோபால் வர்மாவின் மகிமைதான். அட ஆமாங்க எல்லாம் நம்ப நான் கடவும் ராஜேந்திரனின் மகிமை.
சின்னத்திரையில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடரை இயக்கிய எஸ்.என்.சக்திவேல் இயக்கியுள்ள பட்ம தான் ’இவனுக்கு தண்ணில கண்டம்’. சின்னத்திரை தொகுப்பாளர் தீபக் ஹீரோவாக அறிமுகமாகிறார். நேகா ஹீரோயினாக நடிக்கிறார். ஒரு டாஸ்மாக் பாரில் நடக்கும் சம்பவம் ஹீரோவின் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிற கதை.
சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸரை வெளியிட்டனர் படக்குழுவினர். டீஸரின் ஆரம்பத்தில் "ஒரு தம்மா துண்டு ரோடு. ரோட்டுக்கு இந்தப் பக்கம் நான் ரொம்ப நல்லவன். ரோட்டுக்கு அந்தப் பக்கம் நான் ரொம்ப கெட்டவன்" என்று அஜித் பேசிய டயலாக்கை கலாத்து பேசி இருக்கிறார் ராஜேந்திரன்.
அதேபோல் டீசரின் கடைசியில் "மை நேம் இஸ் மார்க்... அண்ட் ஐ ஏம் பேக்" என்று விஜய் மாதிரி தலையாட்டுகிறார். "யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல... இது வெறும் கற்பனையே" என்று முதலிலேயே கார்டு போட்டு விடுகிறார்கள். இந்த டீஸருக்கு லைக்குகள் குவிகிறது.
வெளியிடப்பட்ட ஒரே நாளில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் லைக்குகளை அள்ளியிருக்கிறது. ஆனால் இந்த டீஸரை பார்த்த விஜய், அஜித் ரசிகர்கள் தான் செம்ம கடுப்பில் உள்ளனர். அதோடு அந்த யு டியூப் பக்கத்திலேயே விஜய், அஜித் ரசிகர்கள் கடுமையாக மோதி வருகின்றனர். அதில் ஒரு விஜய் ரசிகர் அஜித்தை வச்சு இப்படி செஞ்சிட்டிங்களேமா என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment