Friday, 20 February 2015

வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு ஆயுல்கால விசா…!! அரசு அதிரடி!!


வெளிநாட்டில் வசித்து வரும் இந்தியர்களுக்கு ஆயுள்கால விசா வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்க சுற்றுப் பயணம் சென்றிருந்த போது, நியூயார்க்கில் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு அதிகபட்சம் 15 ஆண்டுகள் மட்டுமே விசா வழங்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர்கள் இந்தியா வரும் போதும், காவல் நிலையங்களுக்குச் சென்று பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.
இந்த 2 விதிமுறைகளும் கூடிய விரைவில் தளர்த்தப்படும் என்று கூறினார். இதன் படி, கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி, இந்த 2 விதிமுறைகளையும் நீக்கி திருத்தியமைக்கப்பட்ட குடியுரிமை அவசரச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று டெல்லியில் நடந்த, அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த அவசரச் சட்டத்துக்கு மாறாக, குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற பட்ஜட் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாம்.
நாடாளுமன்ற பட்ஜட் கூட்டத் தொடர் அடுத்த வாரம் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவழியினர் என்பதற்கு அடையாளமாக அவர்களுக்கு பி.ஐ.ஓ. அட்டை (PIO) வழங்கப்பட்டு இருக்கிறது.
அதே போல், இந்திய குடியுரிமை பெற்ற வெளிநாட்டு மக்களுக்கான அடையாள அட்டை ஓ.சி.ஐ. (OCI) வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இரு அடையாள அட்டைகளையும் ஒன்றாக்க வேண்டும் என்பது வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கோரிக்கை.
வர இருக்கும், இந்த புதிய சட்ட திருத்த மசோதவின் படி, பி.ஐ.ஓ. அட்டை (PIO) மற்றும் ஓ.சி.ஐ. (OCI) அட்டை ஆகிய இரண்டையும் இனைத்து ஒரே அட்டையாக்கப்படு வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கோரிக்கை நிரைவேற்றப்படுகிறது.

No comments:

Post a Comment