Thursday, 12 February 2015

எனக்கு அஜித்துனா உசுரு.. ஹீரோக்களிலேயே அவர் தான் அழகு..!


சென்ற ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர்களில் பிந்துமாதவியும் ஒருவர். வளர்ந்து வரும் கதாநாயகியான இவர் தற்போது ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
புதுமுக இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ள இப்படத்தில் ஹீரோவாக நகுல், ‘அட்டக்கத்தி’ தினேஷ் ஆகிய இருவரும் நடித்திருக்கிறார்கள். இப்படம் வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது.
சமீபத்தில் படத்தை ப்ரோமோஷன் செய்யும் விதமாக பத்திரிக்கையாளர் சந்தித்தனர் படக்குழுவினர். அப்போது நடிகை பிந்து மாதவி தன் மனதில் பட்டதையெல்லாம் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
அவர் பத்திரிக்கையாளர்களிடம் கூறும்போது, இந்த படத்தில் நடித்தது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. எனக்கு அம்மன் கெட்டப்பில் நடிக்கவேண்டும் என்று நீண்டநாளாக ஆசை. சினிமாவை விட்டு விலகுவதற்குள் ஒரு படத்திலாவது அஜித்துக்கு ஜோடியாக நடித்துவிட வேண்டும். எனக்கு அஜித் என்றால் ரொம்பவும் பிடிக்கும். தமிழ் சினிமா நடிகர்களில் மிகவும் அழகானவர் அஜித்தான் என்று கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, 20 வயதிற்குள் யாரும் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்குள் நுழையக்கூடாது. இந்த வயதுக்குள் என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் யாரும் சினிமாவில் நுழைய விருப்பம் தெரிவித்தால் அவர்களை வரவேற்க மாட்டேன். எனக்கு யாருடனும் இப்போது காதல் இல்லை. நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன் என்று கூறினார்.

No comments:

Post a Comment