Monday, 2 February 2015

விமானிகள் பிளைட்ல தான் பறப்பாங்க.... ஆனால் இவங்க..!


வாயு நிரப்பப்பட்ட பலூனைப் பயன்படுத்தி பசுபிக் சமுத்திரத்தைக் கடந்து இரு விமானிகள் உலக சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்க விமானியான திரோய் பிரட்லியும் ரஷ்ய விமானியான லியோனிட் தியுகட்யெவும் பசுபிக் சமுத்திரத்திலான 5,260 மைல் தூரத்தை வாயு பலூனில் பறந்து கடந்து மெக்ஸிக்கோ கடற்கரையில் தரையிறங்கியுள்ளனர்.
கடந்த ஜனவரி 22 ஆம் தேதி ஜப்பானிலிருந்து புறப்பட்டு மெக்ஸிக்கோவின் கபோ சான் லூகாஸ் பிராந்தியத்தில் சனிக்கிழமை தரையிறங்கிய மேற்படி விமானிகளுக்கு பெருமளவு மக்கள் கூடி வரவேற்பளித்துள்ளனர்.
இதன் மூலம் பசுபிக் சமுத்திரத்தை வாயு பலூனில் கடந்தவர்கள் மற்றும் நீண்ட தூரம் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனில் பறந்தவர்கள் ஆகிய இரு உலக சாதனைகளை மேற்படி இரு விமா-னிகளும் படைத்துள்ளனர்.
7 அடி நீளமும் 5 அடி அகலமும் 5 அடி உயரமுமுடைய பலூன் கட்டமைப்பில் 15,000 அடி உயரம் வரை இந்த விமானிகள் பயணத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment