Monday, 2 February 2015

கவர்ச்சி விருந்து படைத்த அனுஷ்கா.. காண்டான கோலி..!


பிரபல பாலிவுட் நடிகையும், காதலியுமான அனுஷ்கா ஷர்மா மீது கடுப்பில் உள்ளாராம் விராட் கோலி.
சமீபக்காலமாகவே இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரான விராட் கோலியும், பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. இருவரும் பலமுறை ஒன்றாக கைக்கோர்த்து நாடு நாடாக சுற்றிவருகின்றனர். ஆனால் இதுவரை அவர்கள் காதலை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை.
இருந்தாலும் அவர்கள் காதலிப்பது உண்மை என்று அடித்து சொல்கிறார்கள் உண்மை அறிந்தவர்கள். இதற்கு ஒரு உதாரணமும் உள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி தனது காதலியான அனுஷ்கா சர்மாவை நோக்கி பறக்கும் முத்தம் கொடுத்தார். இதுபோதாதா அவர்கள் காதலை உறுதி செய்ய.. சரி இப்போ என்ன தகவல் என்றால் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி விராட் கோலியை கடுப்பேற்றியுள்ளாராம் அனுஷ்கா..
தில் தடக்னே டூ படத்தில் இடம்பெற்றுள்ள ஐட்டம் பாடலுக்கு தான், அனுஷ்கா சர்மா, டான்ஸ் ஆடியுள்ளார். காத்ரீனா கைப், கரீனா கபூர், நர்கிஸ் பஹ்ரி போன்ற நடிகைகள், ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடியதன் மூலம் தான், பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டனர். அந்த வரிசையில் இணைவதற்கு தான் தில் தடக்னே டூ படத்தில் இடம்பெற்றுள்ள ஐட்டம் பாடலுக்கு அனுஷ்கா, கவர்ச்சி விருந்து படைத்துள்ளார்.
மேலும் இந்தாண்டின் சிறந்த ஐட்டம் பாடலாக இது இருக்கும் என்று அனுஷ்கா சர்மா எதிர்பார்க்கிறாராம். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே பிகினியில் நடித்து எல்லோரையும் கிறங்கடித்த அனுஷ்கா இனி எவ்வளவு கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறாராம். அதனால் தான் அனுஷ்கா மீது கடுப்பில் இருக்கிறாராம் விராட்..

No comments:

Post a Comment