குறை பிரசவத்தில் பிறந்து மருத்துவ பராமரிப்பு கருவியில் வைக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக அருகருகே படுக்க வைக்கப்பட்ட இரட்டை குழந்தைகள் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றியவாறு விடுபட மறுத்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
எடின்பேர்க் டட்டிங்ஸ்டன் பிரதேசத்தை சேர்ந்த லோரர் லோங்டன் என்ற கடந்த 5ம் தேதி 30 வார காலப்பிரசவத்தில் இரட்டைக்குழந்தைகளை பிரசவித்தார். உரிய பிரசவ காலத்துக்கு முன் குறைப்பிரசவத்தில் பிறந்த சுமார் 3 இறாத்தல் நிறையை மட்டுமே கொண்ட இந்த குழந்தைகளை மருத்துவமனையில் வெவ்வேறு மருத்துவ பராமரிப்பு கருவியில் பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆரோக்கிய நிலையை அடைந்த பிளயர் மற்றும் இன்னஸ் ஆகிய மேற்படி இரு குழந்தைகளும் ஒரே மருத்துவ பராமரிப்பு கருவியில் அருகருகே படுக்க வைக்கப்பட்ட போது இருவரும் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றியவாறு விடுபட மறுத்துள்ளனர்.
ஒரே சமயத்தில் கருத்தரித்து பிறந்த தாம் என்றென்றும் இணைப்பிரியாத சகோதரர்கள் என்பதை நிரூபிப்பதாக இந்த குழந்தைகளின் செயற்பாடு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment