தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. இவர் திரையில் எவ்வளோ கவர்ச்சியான ஆடை அணிந்து நடித்தாலும், நிஜ வாழ்க்கையில் நான் அப்படி இல்லை இழுத்து போத்திக்கொண்டுதான் செல்வேன் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அனுஷ்கா கூறுகையில், நான் சினிமாவில் அணியும் ஆடைகளை நிஜ வாழ்க்கையில் அணிய மாட்டேன். இதை ஒரு கொள்கையாகவே வைத்து இருக்கிறேன்.
நான் முதல் படத்தில் நடிக்கும் போது அந்த இயக்குநர் என்னிடம் வந்து ஒரு ஆடையை கொடுத்து, அதை அணிந்துகொண்டு வர சொன்னார். அந்த ஆடையை விரித்து பார்த்ததும் ஷாக் ஆயிட்டேன். அந்த ஆடை ரொம்ப குட்டையாக இருந்தது. இதையா அணிய வேண்டும் என்று கேட்டேன். ஆமாம் கதைப்படி உங்கள் கேரக்டருக்கு இந்த ஆடை தான் அணியவேண்டும் என்றனர்.
வேறு வழியின்றி அணிந்து கொண்டு நடித்தேன். வீட்டில் உள்ளவர்கள் இதை பார்த்து ஏன் இப்படியெல்லாம் நடிக்கிறாய் என்று கோபப்பட்டனர். சினிமாவில் கதை என்ன கேட்கிறதோ அதை செய்ய வேண்டும். கவர்ச்சி ஆடை அவசியம் என்றால் அதை அணிந்து கொள்ளத்தான் வேண்டும்.
ஆனால் நிஜ வாழ்க்கையில் நான் வேறு மாதிரி இருக்கிறேன். சினிமா அனுஷ்காவை நிஜவாழ்க்கையில் பார்க்க முடியாது. பட விழாக்கள் பொது விழாக்களுக்கு கலாச்சார முறைப்படி ஆடைகள் அணிந்து செல்கிறேன். சினிமாவில் உடுத்துவது போன்ற குட்டை பாவாடை, கவர்ச்சி உடைகளை அணிய மாட்டேன் என்று அனுஷ்கா கூறினார்.

No comments:
Post a Comment