அஜித்-கெளதம் மேனன் கூட்டணியில் சமீபத்தில் வெளிவந்த ’என்னை அறிந்தால்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருவதுடன் உலகம் முழுவதும் நல்ல வசூலை குவித்து வருகிறது.
படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன நிலையிலும் இன்னும் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் இயக்குநர் கெளதம் மேனனிடம் மீண்டும் அஜித்தை வைத்து படம் எடுப்பீங்களா..? இல்லையா..? எப்போ எடுப்பீங்க.?. என்று துருவ ஆரம்பித்துவிட்டார்கள் ரசிகர்கள்.
இது குறித்தும், என்னை அறிந்தால் வெற்றி குறித்தும் சமீபத்தில் பேட்டயளித்த ஆங்கில நாளிதழிடம் கூறியுள்ளார் கௌதம் மேனன். அவர் அந்த நாளிதழிடம் கூறியதாவது, ‘என்னை அறிந்தால் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஆனால், வசூலுக்கு இன்று வரை எந்த பாதிப்பு ஏற்படவில்லை. இதற்கு ஒரே காரணம் அஜித் தான்.
மேலும், இப்படத்தின் கிளைமேக்ஸில் அஜித் போலிஸாக இல்லை, இதை வைத்தே அடுத்த திரைக்கதை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளேன், கண்டிப்பாக அஜித் இதை ஏற்று கொள்வார் என எதிர்ப்பார்க்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment