பிப்ரவரி 19
1915
மகாத்மா காந்தியின் குரு கோபால கிருஷ்ண கோகலே மறைந்த தினம்…!!
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடியவர்களுள் ஒருவர் கோபால கிருஷ்ண கோகலே. சுதந்திர போராட்ட வீரராக மட்டுமல்லாது, இவர் ஒரு சமூக சீர் திருத்த வாதியாகவும் விளங்கினார்.
இந்திய சேவகர்கள் அமைப்பை உருவாக்கிய இவர், இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஆவார். இவர் இந்திய தந்தை காந்திஜிக்கும், முகமது அலி ஜின்னாவிற்கும் அறிவுரையாளராகவும் விளங்கியுள்ளார்.
இவரது நோக்கம் ஆங்கிலேய அரசிடமிருந்து சுதந்திரத்தை பெறுவது மட்டுமல்லாது, இந்திய சமூகத்தில் உள்ள குறைகளை களையச் செய்வதாக இருந்தது. தம் நோக்கங்களை செயலாக்க இரு வழிகளைக் கையாண்டார் கோகலே.
ஒன்று வன்முறையைத் தவிற்த்தல், அடுத்தது, அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டுவருதல். கோகலே, இந்தியாவின் சுதந்திரம் மற்றும் சீர்திருத்தத்திற்காக பல நாடுகளுக்கு பயணித்துள்ளார்.
இந்தியக் கல்வியை மேம்படுத்துவதற்காக பெரிதும் முயற்சி செய்து வந்தார். அதே நேரத்தில், அவர் தொடர்ந்து இந்திய சேவகர்கள் அமைப்பு, காங்கிரஸ் மற்றும் சட்டப் பேரவையிலும் ஈடுபட்டு வந்தார்.
இதனால், மன அழுத்தம் ஏற்பட்டு இறுதியாக இந்த மன அழுத்தமே அவரது உயிரை வாங்கி விட்டது. 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் நாள் கோகலே தம்முடைய நாற்பத்து ஒன்பதாவது வயதில் இறந்துவிட்டார்.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1664 – மராத்திய பேரரசர் சத்திரபதி சிவாஜி பிறந்தார்.
1855 - தமிழறிஞர் உ.வே.சாமிநாதையர் பிறந்த தினம்.
1878 - கிராமபோனிற்கான காப்புரிமத்தை தாமஸ் எடிசன் பெற்றார்
இன்றைய சிறப்பு தினம்
சிவாஜி ஜெயந்தி(இந்தியா - மகாராஷ்டிரா)
துருக்மேனிஸ்தான் கொடி நாள்
.jpg)
No comments:
Post a Comment