தெலுங்கு உலகின் பிரபல தயாரிப்பாளரும், கின்னஸ் சாதனையாளருமான டி.ராமநாயுடு இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.
அவருக்கு வயது 78. உடல்நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
1964ம் ஆண்டு, என்.டி.ஆர் முன்னணி கேரக்டரில் நடித்த ராமுடு பீமுடு படத்தின் மூலம் தயாரிப்பாளராக, ராமாநாயுடு அறிமுகமானார். சுரேஷ் புரொடெக்ஷன் எனும் தயாரிப்பு நிறுவனம் மூலம், 13 இந்திய மொழிகளில் 150 படங்களுக்கு மேல் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். பல படங்களில் கெஸ்ட் ரோல்களிலும், ராமாநாயுடு நடித்துள்ளார்.
2009ம் ஆண்டு திரைப்பட துறையில் வாழ்நாள் சாதனையாளருக்கான தாதா சாகிப் பால்கே விருது இவருக்கு வழங்கப்பட்டது. 2012ல் இவருக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. ஒரு தேசிய விருது, 3 முறை பிலிம் பேர் விருது, 5 முறை "நந்தி விருதுகளை பெற்றுள்ளார். திருப்பதியில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
இவருடைய மகன் வெங்கடேஷ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற வசந்த மாளிகை படத்தின் தயாரிப்பாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment