சினிமாவை ஒரு கலக்கு கலக்கிய நம்ப பவர் ஸ்டார் தற்போது அரசியலிலும் நுழைந்து ஒரு கை பார்க்க இருக்கிறார்.
சினிமாவிற்கு வந்த புதிதில் எப்போதுமே தனக்கு போட்டி சூப்பர் ஸ்டார் தான் என்று அதிரடி ஸ்டேட்மெண்ட்லாம் விட்டு கோடம்பாக்கத்தையே பரபரவென பறக்க வைத்தார் பவர் ஸ்டார். அதற்கு பிறகு பவர் ஸ்டாருக்கு என்றே தனி ரசிகர்கள் உருவானார்கள் (உருவாக்கினார்).
இவர்கள் பவர் ஸ்டார் எங்கு சென்றாலும், எந்த மேடைக்கு சென்றாலும் அங்கு சென்று கைத்தட்டுவார்கள், கரவோசத்தை எழுப்புவார்கள் . இப்படி சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர் தற்போது ஒரு பிரபல கட்சியில் இணைந்திருக்கிறார்.
சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் தொடங்கிய தமிழ் மாநில கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டை ஏ.இ.கோவில் தெருவில் நேற்றிரவு நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் ராயபுரம் மனோ, ரங்கபாஷ்யம், தமிழ் மாநில கட்சியின் பொதுச் செயலாளர் செங்குட்டுவன், பொருளாளர் காசிராமலிங்கம், மாநில அமைப்பாளர் துரைசிங்கம், மாநில இணை அமைப்பாளர் கொளத்தூர் ஜி.பழனி, தலைமை நிலைய செயலாளர் ஆர்.கே.ரமேஷ், மாநில துணை பொதுச் செயலாளர்கள் இ.நிக்சன், விஜயராமன், ஜி.கே.ராஜ், செல்வமுருகன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
கூட்டத்திற்கு கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சி. பால்கனகராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் மேடை ஏறிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தமிழ் மாநில கட்சியில் இணைவதாக அறிவித்தார். அவருக்கு கட்சி நிறுவனர் ஆர்.சி.பால்கனகராஜ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
சினிமாவில் தனக்கு என்றுமே போட்டி சூப்பர் ஸ்டார் தான் என்று அதிர வைத்த பவர் ஸ்டார் அரசியலில் தனக்கு போட்டி மோடிதான் என்று சொன்னாலும் சொல்லுவார்.

No comments:
Post a Comment