Monday, 16 February 2015

அன்று பல பேர்களின் கேலி, கிண்டல்கள்.. இன்று சாதனையாளன்..!


ஒருவனுக்கும் திறமையும், நம்பிக்கையும் மட்டும் இருந்தால் அவன் வாழ்வில் நிச்சயம் வெற்றிபெறாலாம் என்பதை நிரூபித்து காட்டியவர் சிவகார்த்திகேயன்.
பல பேரின், கேலி, கிண்டல்கள், வீட்டின் பிரச்சினைகள் என்று பலவற்றை கடந்து இன்று நம் முன்னாள் சாதனையாளனாக நிற்கிறார் சிவகார்த்திகேயன்.
எந்த ஒரு சினிமா பின்புலமும், ஆதரவும் இல்லாமல் தன் சொந்த காலை ஊனி வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலரே. அந்த வகையில் இன்று தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன். சாதரண குடும்பத்தில் பிறந்து இன்ஜினியரிங், எம்.பி.ஏ என பட்டப்படிப்புகளை படித்து வேலைக்கு செல்வார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் தன் குரலை எடுத்து கொண்டு பிரபல தொலைக்காட்சி வாசலில் வந்து நின்றார்.
அன்று இவருக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை என்று அவரை சுற்றியுள்ளவர்கள் பலரும் பேசியிருப்பார்கள். ஆனால், தன் திறமையை மட்டுமே நம்பி ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்டாக தன் வாழ்க்கையை தொடங்கிய சிவா, ரஜினி, கமல், அஜித், விஜய் என பல பேரின் வாய்ஸை பேசி அனைவரையும் கவர்ந்தார்.
தற்போது அவர் பேசிய குரல்களே அவரை அழைத்து பாரட்டுகிறது. தொலைக்காட்சி தொகுப்பாளாராக தன் வாழ்க்கையை தொடங்கிய சிவா அதன் பின் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த மெரினா படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இதில் அவருக்கு ஹீரோவுக்கான அந்தஸ்து கிடைக்கவில்லை. அடுத்து வந்த '3' படத்தில் கதாநாயகனின் நண்பனாகவும், காமெடியனாகத்தான் நடித்தார். இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு 'மனம் கொத்திப் பறவை' படத்தில் கதையின் நாயகனாக நடித்து தானும் ஒரு கதாநயாகன்தான் என்பதை நிரூபித்தார்.
தொடர்ந்து 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்தாலும் அந்த முருகன் கதாபாத்திரத்தில் அவரைத் தவிர வேறு யாரையும் பார்க்க முடியவில்லை. அடுத்து வந்த 'எதிர் நீச்சல்' படம் எதிர்பார்க்காத ஒரு வெற்றியைக் கொடுத்தது. தொடர்ந்து வந்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் வெற்றி அவரை எங்கேயோ கொண்டு போய் நிறுத்திவிட்டது. அந்தப் படத்திலும் சராசரி இளைஞர்களின் கதாபாத்திரத்தைப் பிரதிபலித்ததுதான் அவருக்குக் கிடைத்த வெற்றி. அதற்கு அடுத்து வெளிவந்த மான்கராத்தே படம் வசூல் ரீதியான வெற்றியை கொடுத்தது. ஆனால் சிவகார்த்திகேயனுக்கு சற்று சறுக்கலை கொடுத்தது.
அவர் தற்போது நடித்துள்ள 'காக்கி சட்டை' படம் அடுத்த வாரம் வெளிவர இருக்கிறது. இந்தப் படத்தின் டிரைலரை இதுவரை 24 லட்சத்திற்கும் மேற்பட்டோர் யு டியூப்பில் பார்த்துள்ளனர். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு போன்ற நடிகர்களின் பட டீஸர்களுக்குதான் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும். இப்போது சிவகார்த்திகேயனும் அந்த இடத்தை நோக்கி நகர்ந்திருக்கிறார்.
தற்போதைய நிலையில் பெண்கள் மற்றும் குட்டீஸ்களின் பேவரட் ஹீரோ யார் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். தயாரிப்பாளர்களின் பேவரட் ஹீரோவும் சிவகார்த்திகேயன் தான். இப்படி எல்லோருக்கும் பிடித்த சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்த நாள்... அவருடைய வளர்ச்சியும், உழைப்பும் மென்மேலும் வளர ’தமிழ் உலகத்தின்’ பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment