சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிக்கைக்கு பேட்டியளித்த நடிகை பிந்து மாதவி 'சினிமாவை விட்டு போவதற்குள் ஒரு படத்திலாவது அஜித்துக்கு ஜோடியாக நடித்துவிட வேண்டும். எனக்கு அஜித் என்றால் ரொம்பவும் பிடிக்கும். தமிழ் சினிமா நடிகர்களில் மிகவும் அழகானவர் அஜித்தான் என்று கூறினார்.
தற்போது அவருடைய ஆசை சீக்கிரம் நிறைவேற இருக்கிறதாம். என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித் மீண்டும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது நமக்கு தெரியும். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்று கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்த படம் குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளது. தற்போதைக்கு தல 56 என பெயர் வைத்திருக்கும் இந்தப் படத்தில் அஜித்துக்கு 2 ஜோடிகளாம். அதில் ஒருவர் ஸ்ருதி ஹாசன் மற்றொருவர் பிந்து மாதவி என்று கூறப்படுகிறது.
இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசனும், சமந்தாவும் நடிப்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது சமந்தா இடத்தை பிந்து மாதவி பிடித்து விட்டாராம்.

No comments:
Post a Comment