Friday, 20 February 2015

சூப்பர் சிங்கர் ஜூனியர் 4: பட்டத்தை வெல்லப்போவது யார்..?


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் 4- இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 20ஆம் தேதி அதாவது இன்று மாலை சென்னையில் இறுதி போட்டி நடக்கவுள்ளது.
இதில் பல திரையுலக பிரபலங்களும், முன்னணி பாடகர்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்த இறுதி போட்டியில் 6 போட்டியாளர்கள் பாட இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனில் திவ்வாகர் ஏர்டெல் சூப்பர் சிங்கராக தேர்ந்தெடுக்கபட்டார். அதைத் தொடர்ந்து இந்த சீசனில் யார் வெற்றிப்பெறுவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
போட்டியாளர்கள் யார் யார்..?
பரத்:
ஃபைனலுக்கு வந்திருக்கும் 6 போட்டியாளர்களில் ஒரே ஒரு ஒரே ஆண் போட்டியாளர் பரத். கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த இவர் ஒரு சில கஷ்டமான பாடல்களை பாடி நிகச்சி நடுவர்களை அசர வைத்துவிட்டார்...
அனுஷ்யா:
ஆரம்பத்தில் இவரை அதிகம் கவனித்ததில்லை. ஆனால் வொயில்ட் கார்ட் ரவுண்ட் வந்தபோது செமையாக பாடினார். குறிப்பாக "பறை" குறித்த பாடலின் இறுதியில் உணர்ச்சி மேலிட அழுத காட்சி.. விஜய் டிவி க்கு கிடைத்த வர பிரசாதம்...
ஜெஸ்ஸிகா:
இலங்கையை சேர்ந்த ஜெஸ்ஸிகா வொயில்ட் கார்ட்டில் அதிக ஓட்டுகள் வாங்கியது இறுதி சுற்றுக்கு காலடி எடுத்து வைத்திருக்கிறார்.. "விடை கொடு எங்கள் நாடே " இவர் பாடிய போது நம் இலங்கை நண்பர்களை நினைத்து நம்மையும் கண்ணீர் சிந்த வைத்தார்.
சிரிஷா:
பல வித பாடல்களையும் அற்புதமாக பாட வல்லவர் சிரிஷா. . மெலடி குயீன் என்று சொல்லலாம். வொயில்ட் கார்டில் நடுவர்களால் மிக அதிகம் பாராட்டப்பட்டாலும் - ஆறாவது மற்றும் கடைசி நபராக உள்ளே நுழைந்தார்.
ஸ்பூர்த்தி:
9 வயதில் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியவர் ஸ்பூர்த்தி. இவரது திறமை வியக்க வைக்கிறது. அனைத்து வகை பாடல்களையும் சிறிதும் தடுமாறாமல் பாடி அசத்தும் இவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரிப்ரியா:
கடந்த சில மாதங்களாக சூப்பர் சிங்கர் ஜூனியர் பார்க்கும் பெரும்பாலான மக்களால் "டைட்டில் வின்னர்" என்று கணிக்கப்பட கூடியவர் ஹரிபிரியா. முறைப்படி சங்கீதம் கற்காவிடினும் இசை மீதுள்ள ஈர்ப்பால் - கடினமான பாடல்களை கூட அனாயசமாக பாடுவார்.

No comments:

Post a Comment