முன்னாள் ஜனாதிபதி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அதிகாரத்தைத் தக்கவைக்க முயன்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மார்ச் 31ஆம் திகதி நேரில் ஆஜராக இலங்கை உயர் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான மூன்று நீதியரசர்களை கொண்ட குழு இந்த உத்த-ரவை பிறப்பித்தது. முன்னிலை சோஷலிஸக் கட்சியின் தலைவர் துமிந்த நாகமுவ தாக்கல் செய்த மனுவில், கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு அடுத்த நாள் ஜனவரி 9ஆம் தேதியன்று கொழும்பில் முப்படை-களையும் தயார்படுத்தி நாட்டில் குழப்ப சூழ்நிலையை ஏற்படுத்த முனைந்தார் என்ற குற்றச்-சாட்டே ராஜபக் ஷ மீது சுமத்தப்பட்டுள்ளது.
இது அரசியல் அமைப்பின்படி அடிப்படை உரிமை மீறல் செயலாகும் என்று மனுவில் சுட்டிக்-காட்டியுள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஸ்ரீபவன் தலைமையிலான 3 நீதி-பதிகள் கொண்ட அமர்வு, மார்ச் 31ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகு மாறு ராஜபக் ஷவுக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

No comments:
Post a Comment