பாலிவுட் முன்னணி நடிகராக திகழும் சல்மான் கானின் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார் நடிகை ஒருவர்.
சல்மான் கான் தற்போது சூரஜ் பர்ஜாத்யா இயக்கிவரும் ’பிரேம் ரத்தன் தான் பாயோ’படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடிக்க தங்கையாக ஸ்வரா பாஸ்கர் நடிக்கிறார்.
இவர் தனுஷ் நடித்த ராஞ்சனா படத்தில் அவருக்கு நெருங்கிய தோழியாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தான் சல்மானின் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார்.
ஆனால் நிஜத்தில் அல்ல, படத்தில். இந்த படத்தில் அண்ணன் சல்மானுக்கும், தங்கை ஸ்வராவுக்கும் இடையே சண்டை ஏற்படுமாம். அப்போது ஆத்திரத்தில் ஸ்வரா சல்மானின் முகத்தில் ஓங்கி குத்துகிறாராம். இதைதான் சமீபத்தில் படமாக்கி இருக்கிறார்கள் படக்குழுவினர்.
இந்த காட்சியில் நடித்த பிறகு சல்மான் கானின் முகத்தில் குத்தியதை நினைத்து ரொம்ப வருத்தபட்டாராம் ஸ்வரா. இந்த படம் ரிலீஸானால் சல்மான் கானின் ரசிகர்கள் என்னை அடிக்க வரப் போகிறார்கள் என்றார் ஸ்வரா பாஸ்கர்.பிரேம் ரத்தன் தான் பாயோ படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் ஆக உள்ளது.

No comments:
Post a Comment