ரஷ்யாவில் அதிசியமாக தோன்றிய மூன்று சூரியன்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கஜகஸ்தான் எல்லையில் இருந்து 80 மைல் தூரத்தில் இருக்கும் ரஷ்யாவின் ஒரு சிறிய நகர வாசிகள் தங்களின் காலை நேரத்தில் அப்படி ஒரு அதிசயத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆம் அவர்கள் அதிகாலை பார்த்தது மூன்று சூரியன்கள். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து கூறுகையில், ’காற்றில் இருக்கும் மிகச்சிறிய பனித்துகள்கள் ஏற்படுத்தும் எதிரொளிப்பே இத்தகைய நிகழ்வுக்குக் காரணம் ஆகும். இவை வெப்பநிலை 25டிகிரிக்கும் குறைவாக இருக்கும் போது தானாக உருவாகிக் கொள்ளும் தன்மை உடையது.
இத்துகள்களை நாம் சாதாரண கண்களால் பார்க்க இயலாத அளவிற்கு மிகச் சிறியது. ஆனால் இதன் எதிரொளிக்கும் திறன் மிக மிக அதிகமாக இருக்கும்.’ என்று கூறியுள்ளனர்.
வீடியோ கீழே…

No comments:
Post a Comment