வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் அனேகன்.
கேவி ஆனந்த இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக, அமைரா தஸ்தூர் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நவரச நாயகன் கார்த்திக்கும் நடித்திருக்கிறார்.
AGS நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். காதலர் தினத்தை முன்னிட்டு அனேகன் படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகி இருக்கிறது.
படம் எப்படி..
படத்தில் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்ணாக வருகிறார் அமைரா தஸ்தூர். அவருக்கு திடிரென்று முன் ஜென்ம கதைகள் நியாபகம் வருகிறது. அப்போது பர்மாவில் 1962ல் கதை விரிகிறது.
இதில் பர்மாவில் ஏழை இளைஞனாக தனுஷ் வருகிறார். அங்கே ஒரு ஆபத்தில் தனுஷ் ஹீரோயினைக் காப்பாற்ற, இருவருக்குமிடையே காதல் வளர்கிறது. அதை பணக்கார அப்பா எதிர்க்க, உருக்கமான முடிவுடன் அந்த எபிசோடு முடிகிறது.
இப்போது அதே பணக்கார அப்பா, ஹீரோயினுக்கு மாமாவாகப் பிறந்திருக்கிறார். ஹீரோயினின் முன் ஜென்மக் கதையை யாரும் நம்பாதபோது, ‘தற்கால’ தனுஷ் அதே ஐ.டி.கம்பெனியில் ஜாயின் செய்கிறார். கம்பெனிக்கு ஓனர், கார்த்திக். ஹீரோயினின் கதையை தனுஷும் கண்டுகொள்ளாமல் விட, இன்னொரு ஜென்மக் கதையை ஓப்பன் செய்கிறார் ஹீரோயின்.
25 வருடங்களாக சால்வ் பண்ண முடியாத ஒரு போலீஸ் கேஸை ஹீரோயின் தீர்த்துவைக்கிறார். அந்த கேஸ் தான் இன்னொரு ‘தனுஷ்-அமைரா(ஹீரோயின்)’ கதை. அதே காதல், அதே முடிவு. கொஞ்சம் டுவிஸ்ட்டுடன். தற்போது இந்த கதைகளையெல்லாம் நிகழ் காலத்தில் ஒட்டவைத்து அதிரடி கிளைமேக்ஸுடன் படத்தை முடித்திருக்கிறார்கள்.
தனுஷ் தன் யதார்த்த நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். கார்த்திக் நீண்ட இடைவேளைக்கு பிறகு கலக்கியுள்ளார். பாடல்கள் அதை படமாக்கிய விதம் ரசிக்க வைக்கிறது.
அருமையான கான்செப்ட், அட்டகாசமான பாடல்கள், வழக்கம்போல் தனுஷ் மற்றும் கார்த்திக்கின் அருமையான நடிப்பு, ஆனால் படத்தில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்று கூறுகின்றனர் படத்தை பார்த்த ரசிகர்கள். அதோடு திரைக்கதை கொஞ்சம் தடுமாறுகிறது என்றும் கூறுகிறார்கள்.

No comments:
Post a Comment