சென்னை சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக கலை விழா 12-02-2015 அன்று நடைபெற்றது. பிரபல கிரிக்கெட் வீரர் திரு. கௌதம் கம்பீர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு.டாக்டர். ஜேப்பியார் அவர்கள் திரு. கௌதம் கம்பீர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். திரு.கௌதம் கம்பீர் அவர்கள் தான் கையெழுத்திட்ட கிரிக்கெட் மட்டையை திரு.ஜேப்பியார் அவர்களுக்கு பரிசளித்தார்.
பல்கலைக்கழகங்களுக்கிடையே நடைப்பெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற கிரிக்கெட் அணிக்கு (சத்யபாமா அணிக்கு) கோப்பையை திரு.கௌதம் கம்பீர் வழங்கினார். பல்கலைக்கழகத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சிறப்பு ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட்டது.
மகளிர் விழாவில் சிறப்பாக பரிசுகளை அள்ளும் மாணவிக்கு வழங்கப்படும் புதிய கோப்பை அறிமுகம் செய்யப்பட்டது. திருமதி.ரெமிபாய் ஜேப்பியார் மகளிர் விழா கோப்பையை திரு. கௌதம் கம்பீர் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.
தேசிய அளவில் நடைப்பெறும் மகளிர் விழாப் போட்டிகளில் பங்கேற்று அக்கோப்பையை கைப்பற்ற போவது யார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது. இதில் பரிசு பெறும் மாணவியும், இந்த கோப்பையைக் கைப்பற்ற போவது யாரென்று இரண்டு நாளில் தெரிந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டபோது அரங்கமே அதிர்ந்தது.
பின்னர் பல்கலைக்கழக கலைவிழா கோலாகலமாக கண்கவர் நடனங்களுடன் துவக்கி வைக்கப்பட்டது.

No comments:
Post a Comment