தனது மைத்துனனால் தவறுதலாக வேட்டைக்கு பயன்படும் சிறு துப்பாக்கியால் சுடப்பட்டு 325 குண்டுகள் முகத்தை ஊடுருவிய நிலையில் 6 வயது சிறுவன் ஒருவன் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் தப்பிய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
தென்மேற்கு சீனாவில் சிசுவான் மாகாணத்திலுள்ள நெயிஜியாங் நகரைச் சேர்ந்த யாங் யாங் என்ற மேற்படி சிறுவன் தனது மைத்துனனான 6 வயது சிறுவனுடன் விளையாடிய போது, மைத்துனன் துப்பாக்கியை விளையாட்டுப்பொருள் என கருதி கையிலெடுத்து அதனால் யாங் யாங்கின் முகத்தில் சுட்டுள்ளார்.
இந்நிலையில் முகத்தில் பெரிய துளைகள் ஏற்ப்பட்டு இரத்தம் பெருக்கெடுத்தோட அழுதவாறே யாங் யாங் மைத்துனன் உடன் வீடு திரும்பியுள்ளான்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட யாங் யாங்கிற்கு அறுவைச்சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் அவனது முகத்தை ஊடுருவியிருந்த துப்பாக்கி குண்டுகள் அனைத்தையும் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். ஒவ்வொரு துப்பாக்கிக் குண்டும் 2 மில்லி மீட்டர் விட்டமுடையதாகும்.

No comments:
Post a Comment