இலங்கை இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் (sinha regiment) செல்லப்பிராணியான குகர் (cougar) என்ற சிங்கம் நேற்றுமுன்தினம் (11) உயிரிழந்துள்ளது. 18 வயதான அச்சிங்கத்தின் உடல் சமய சடங்குகளையடுத்து சிங்க ரெஜிமென்ட் மத்திய நிலைய பூமியில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் சிங்க ரெஜிமென்ட் உயரதிகாரி பிரிகேடியர் பீ.ஏ.எல். ரத்நாயக்க உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
1996ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி தெஹிவலை மிருகக்காட்சிசாலையில் பிறந்த குகர் சிங்க ரெஜிமென்ட்டின் வேண்டுகோளுக்கிணங்க அன்றை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் அதே ஆண்டு 3ஆம் திகதி பரிசளிக்கப்பட்டது.
இறக்கும் போது குகர் 2.5 அடி உயரமும் 5 அடி நீளமும் கொண்டிருந்தது. இதன் தாயகம் தென் ஆப்பிரிக்கா ஆகும்.

No comments:
Post a Comment