Thursday, 12 February 2015

ஓசூர் ரயில் விபத்தில் சிக்கியவர்களுக்கு 2 லட்சம் இழப்பீடு!!


பெங்களூருவிலிருந்து எர்ணாகுளம் சென்ற பயணிகள் ரயில் இன்று காலை ஓசூர் அருகில் உள்ள அருகில் தடம் புரண்டு விபத்தானது. இச்சம்பவத்தில் 10 பேர் பலியாகி யுள்ளதாகவும் 100 பேர் காயமுற்றிருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூரில் இருந்து கோயம்புத்தூர் வழியாக எர்ணாகுளம் சென்று கொண்டிருந்த இண்டர்சிட்டி விரைவு ரயில் (ரயில் எண்: 12677) இன்று காலை 7:40 மணியளவில் ஓசூரை அடுத்து 4 கி.மீ . தொலைவில் உள்ள ஆனைக்கல் என்ற இடத்தில் தடம் புரண்டு விபத்தானது.
ஆனைக்கல் பகுதியை கடந்து கொண்டிருந்த போது, ரயிலின் எஞ்ஜின், டி-8 மற்றும் டி-9 பெட்டிகள், 2 ஏ.சி. பெட்டிகள் உட்பட 4 பெட்டிகள் தடம் புரண்டன.
விபத்து ஏற்பட்ட உடன் சம்பவ இடத்துக்கு தமிழகம் மற்றும் கர்நாடகா ரயில்வே அதிகாரிகள் விரைந்து சென்று மீட்புப் பணிகளை ஆரம்பித்துள்ளனர். இரு மாநிலங்கள் சார்பில் 10 ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
விபத்தில் D-9 பெட்டிதான் அதிக பாதிப்பிற் குள்ளாகியுள்ளதாகவும், இன்னமும் தடம் புரண்ட பெட்டிகளுக்குள் பயணிகள் சிக்கியுள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
விபத்து ஏற்பட்டதை அறிந்த மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, உடனடியாக ஆனைக்கல்லுக்கு சென்று, மீட்புப் பணிகளை பார்வையிட்டுள்ளார். அதோடு, "விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000மும், சிறிய காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.20,000 உதவித் தொகையும் வழங்கப்படும்" எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விபத்து குறித்து தகவல் அறிய:
பெங்களூரு எண்கள் : 9731666751, 0802237116.
திருவணந்தபுரம் : 0471-2321205, 0471-2321237, 09746769960
எர்ணாகுளம் : 0484-2100317, 0813699773, 09539336040
எர்ணாகுளம் டவுன் : 0484 2398200
திருச்சூர் : 0487- 2424148, 2430060

No comments:

Post a Comment