சிறந்த நடிகர், நடிகைகள், சிறந்த இயக்குநர் ஆகியோருக்கு தான் விருது கொடுத்து பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு ஒரு விருது வழங்கும் விழாவில் மோசமான நடிகர், நடிகைகளுக்கும் விருது கொடுத்திருக்கிறார்கள். இந்த விருதை அறிமுகப்படுத்தியவர் பர்மா என்பவர் தான். கடந்த சில வருடங்களாகவே இந்த விருதுகளை அவர் வழங்கி வருகிறார்.
இந்த விருதின் பெயர் "கோல்டன் கேலா". பாலிவுட்டில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு மட்டும் விருது வழங்காமல் மோசமான நடிப்பினை வெளிப்படுத்தியவர்களையும் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி வருகின்றது இந்த அமைப்பு. அதன் படி கடந்த வருடத்தில் மோசமாக நடித்த நடிகர், நடிகைகளுக்காக விருது வழங்கும் விழா டெல்லியில் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது.
இதில் மிகவும் மோசமாக நடித்த நடிகை விருது சோனாக்சி சின்ஹாவுக்கு வழங்கப்படுகிறது. தமிழில் ரஜினியுடன் "லிங்கா" படத்தில் நடிக்கவே தெரியாமல் மோசமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காகவும், இந்தியில் ஆக்ஷன் ஜாக்சன், ஹாலிடே படங்களில் மோசமாக நடித்ததற்காகவும் இந்த விருது வழங்கப்படுகிறது.
என்டர்டெய்ன்மென்ட் இந்தி படத்தில் மோசமாக நடித்ததற்காக நடிகை தமன்னாவுக்கு மோசமான நடிகை விருது வழங்கப்படுகிறது.
இந்தியில் ஆக்ஷன் ஜாக்சன் படத்தை எடுத்த பிரபுதேவாவுக்கு கடந்த வருடத்தின் மோசமான டைரக்டர் விருது வழங்கப்படுகிறது. ராணிமுகர்ஜி, கத்ரினா கைப் போன்றோரும் சல்மான்கான், சயீப் அலிகான் போன்றோரும் மோசமான நடிகை, நடிகர் விருதுகளை பெறுகிறார்கள். மேலும், ஜாலிக்காக வழங்கப்படும் இந்த விருதுகளை தயக்கம் இல்லாமல் நேரில் போய் வாங்கவும் இவர்கள் முடிவு செய்துள்ளனர்.

No comments:
Post a Comment