தெலுங்கு நடிகையிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் டோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு இயக்குநர் புரி ஜெகநாத் ‘ஆந்திரா பொரி' என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்தப்படத்தில் உல்கா குப்தா ஹீரோயினாக நடிக்கிறார்.
கடந்த சில நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு பலவன்சா பகுதியில் நடந்து வருகிறது. ஹீரோ, ஹீரோயின் மற்றும் பட குழுவினர் அனைவரும் பத்ராச்சலம் பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்து படப்பிடிப்பில் பங்கேற்கின்றனர். சமீபத்தில் புரி ஜெகநாத் மனைவி லாவண்யா படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார்.
அவரிடம் பேசிய ஹீரோயின் உல்கா, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னிடம் சில்மிஷம் செய்ததாக கூறி வருத்தப்பட்டார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த லாவண்யா விஷயத்தை புரி ஜெகநாத்திடம் கூறினார். உடனடியாக அவர் டிஎஸ்பியை அணுகி சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரின் தகாத செயல் குறித்து புகார் அளித்தார்.
அதன்பேரில் டிஎஸ்பி நடவடிக்கை எடுத்தார். சில்மிஷத்தில ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் சண்முகாச்சாரியை சஸ்பெண்ட் செய்ததுடன் கடுமையாக எச்சரிக்கையும் செய்தார். இதனால் டோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment