Thursday, 19 February 2015

லிங்கா நஸ்டம்: சதித்திட்டங்களும், விநியோகஸ்தர்களின் வில்லத்தனமும்..?


ரஜினி, அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு ரிலீஸான படம் ’லிங்கா’. இப்படத்தால் நாங்கள் நஷ்டம் அடைந்து விட்டோம் என்று ஒவ்வொரு நாளும் போராட்டங்கள், நடத்தி வருகின்றனர் விநியோகஸ்தர்கள்.
இப்பிரச்சினைக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் லிங்கா' விநியோகஸ்தர்கள் தரப்பில் வைக்கப்பட்டிருந்த நஷ்ட ஈடு கோரிக்கைக்கு, தன்னால் 10% மட்டுமே தரமுடியும் என்று கூறினார்.
எனினும் அது போதாது என்றும், ரஜினி இப்பிரச்சினையில் தலையிட வேண்டும் என்றும் பிச்சையெடுக்கும் போராட்டத்தை நடத்த போவதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறினர். மேலும் ரஜினியை நஷ்ட ஈடு தரவிடாமல் இரண்டு முக்கிய நடிகர்கள் தடுக்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் தான் சில அதிர்ச்சி தகவல்கள் ஆதரத்துடன் அரசல் புரசலாக வெளிவந்துள்ளது.
சிங்கார வேலனின் மறுமுகம்:
இந்த போராட்டத்தின் முக்கிய புள்ளியான சிங்கார வேலனின் உண்மை முகங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது இந்த போராட்டதுக்கு அரசியல் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர் சிங்கார வேலன் தரப்பினர். அதோடு இப்போராட்டத்துக்கு அதிமுகவின் ஆதரவு கேட்டு விளம்பரமும் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் திமுக வுக்கும் சிங்கார வேலனுக்கும் இருக்கும் தொடர்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியே வர ஆரம்பித்திருக்கின்றன. இதனால் இவருக்கு எப்படி அதிமுக தலைமையிலான அரசு உதவ முன் வரும் என்ற கேள்வியும் எழுப்பி வருகிறார்கள்.
ஆனாலும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பார்வைக்கு இந்த பிரச்னையைக்கொண்டு செல்ல தலைகீழாக நிற்கிறார்கள் சிங்காரவேலன் தரப்பினர். ”எங்களுக்கு ஆசி தாருங்கள் அம்மா” என்று புலம்பலுடன் ஒரு போஸ்டர் அடித்திருக்கிறார்கள்.
ஆனால் இதையெல்லாம் செய்யும் சிங்காரவேலன் யார் தெரியுமா? திமுக சார்பில் கடந்த சட்டசபைத்தேர்தலில் போட்டியிட மனு செய்து, அது கிடைக்காமல் சுயேட்சையாக போட்டியிட்டவர் தான். ”அப்படிப்பட்டவர் இப்போது திடீரென ஸ்டண்ட் அடித்து காலில் விழுந்தால் ‘அம்மா’வுக்குத் தெரியாதா என்ன? இதனால் தான் வேல்முருகன் உள்ளிட்டவர்கள்கூட இந்த பிரச்சினை குறித்து வாயே திறக்காமல் அடங்கிவிட்டார்கள்.
ஆனால் இவர் மட்டும் ஏன் இந்த பிரச்சினையை இழுத்துகொண்டே இருக்கிறார் என்று விசாரிக்கையில் அவர்கள் குழுவில் 5 பேர் அ.தி.மு.க. அனுதாபிகளாம். இவர்களை வைத்துதான் காய் நகர்த்தி வருகிறாராம் சிங்கார வேலன். ஆனால் சிங்கார வேலனுக்கும் இந்த போராட்டத்துக்கும் தொடர்பு இல்லை அவரையே முன் நிறுத்தாதீர்கள் என்று கூறி ஒரு அறிக்கையையும் வெளியிட்டு இருக்கிறார்கள் சில விநியோகஸ்தர்கள் .
ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு:
'லிங்கா' விநியோகஸ்தர்கள் 'பிச்சை எடுக்கும் போராட்டம்' நடத்தும் அதேநாளில், அவர்களுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக, தமிழகம் முழுவதும் இருக்கும் ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்போரட்டத்தை நடத்தவும், அதற்கு ரஜினி ரசிகர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள். ஃபேஸ்புக்கில் இருக்கும் ரஜினி ரசிகர்களுக்கான பக்கங்களிலும் இதற்கான ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் ஆதரவு:
கடந்த சில நாட்களாக விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்தான் இந்த பிச்சை எடுக்கும்போராட்டத்தை துவக்கி வைக்கப்போகிறார் என்று படத்துறையில் பேச்சு அடிபட்டு வருகிறது.
இது குறித்து அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில்,
“ஒரு தொழிலில் இலாபம்-நட்டம் வருவது சகஜம்தான். சினிமா என்பது இப்போது தொழிலாக இல்லாமல் சூதாட்டமாக மாறிவிட்டது. இந்தச் சூதாட்டத்தில் அரசியல்வாதிகளை இழுப்பது அநாகரிகம். அதைவிட அநாகரிகம் நடித்த நடிகர்களிடம் நட்டஈடு கேட்பது. லிங்கா திரைப்படத்தைப் பொறுத்தவரை நட்டம் அடைந்ததாகச் சொல்லப்படும் விநியோகஸ்தர்கள் யாருமே தொழில்முறை விநியோகஸ்தர்கள் அல்ல. அதுதான் இங்கு பிரச்சனை.
உண்மையிலேயே நட்டஈட்டை வேந்தர் மூவிஸிடம்தான் இவர்கள் கேட்க வேண்டும். அதைவிடுத்து ரஜினி அவர்களிடம் கேட்பது தவறானது. லிங்கா படத்தின் மூலம் இலாபம் அடைந்திருந்தால் அதிக இலாபம் அடைந்துவிட்டோம் என்று அந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கு எந்த விநியோகஸ்தராவது இலாபத்தில் பங்கு கொடுத்திருக்கிறார்களா? அல்லது இலாபம் அடைந்தோம் என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்களா?
லிங்கா திரைப்படத்தைப் பொறுத்தவரை விநியோகஸ்தர்கள் நட்டம் அடைந்துவிட்டதாகச் சொல்லி உண்ணாவிரதம், பிச்சையெடுக்கும் போராட்டம் என்று மிரட்டுவது தொழிலுக்கே எதிரானது.. என்று கூறியுள்ளனர். ஏற்கனவே நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் இந்தப் பிரச்னையில் சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment