நுகேகொடவில் நேற்று மாலை இடம்பெற்ற மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன், அங்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட செய்தியும் வாசிக்கப்பட்டது.
இந்தப் பாரிய கூட்டத்தினால் ஸ்ரான்லி திலகவர்த்தன மாவத்தையில் போக்குவரத்து முடங்கியது. நுகேகொடவில் நேற்று மாலை இடம்பெற்ற மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன், அங்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட செய்தியும் வாசிக்கப்பட்டது.
இந்தப் பாரிய கூட்டத்தினால் ஸ்ரான்லி திலகவர்த்தன மாவத்தையில் போக்குவரத்து முடங்கியது. மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க ஆதரவு தெரிவிக்கும் இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிபி.ரத்நாயக்க, ஜயந்த கெட்டகொட, கீதாஞ்சன குணவர்த்தன, சாலிந்த திஸாநாயக்க, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்த்தன, உதய கம்மன்பில, டிவி.உபுல், நிமல் லன்சா, தயான் ஜயதிலக உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவன்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த பதவியில் இருந்தாலும் உண்மையில் ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதி என தெரிவித்தார். ”பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அமரும் ஆசனத்திலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமர்கிறார். இதன் மூலம் தானே ஜனாதிபதி என்பதை ரணில் விக்ரமசிங்க காட்டுகிறார். ஆகவே இது சிறிசேனவின் ஆட்சியல்ல, ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி.
மைத்திரிபாலவிற்குள் ஒழிந்து ரணில் பிரதமர் பதவியை பெற்றுக் கொண்டாலும் அவர் மஹிந்த பிரதமரான பின்னர், ரணில் வேறு ஒருவரை தேட வேண்டும். மஹிந்த ராஜபக்ஷவை சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிக்க வேண்டும். ரணிலை விட மஹிந்த மேலானவர் என்பதை தற்போதைய ஜனாதிபதி அறிவார்.
பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆயிரம் ஏக்கரில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பவுள்ள அகதிகள் குடியமர்த்தப்படவுள்ளனர். இவர்களில் அகதிகள் மாத்திரம் வருவதில்லை இந்திய றோவினால் இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்ட புலனாய்வாளர்களும் குடியேற்றப்படுவர்.
ஆட்சி அமைக்க உதவிய இந்தியாவிற்கு ரணில் தலைமையிலான அரசாங்கம் சலுகைகளை வழங்கி வருவதுடன் மாருதி போன்ற இந்திய உற்பத்தி வாகனங்களுக்கு வரிகளை குறைத்து லஞ்சம் வழங்கியுள்ளதாக விமல் வீரவன்ஸ கூறியுள்ளார்.

No comments:
Post a Comment