Thursday, 19 February 2015

ரூ.1 லட்சம் கோடியில் போர் கப்பல்கள்… மோடியின் அதிரடி!!


பிரதமர் மோடி, ’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்திய கடற்படைக்கு உதவும் விதமாக 7 போர்க்கப்பல்களையும், 6 நீர்மூழ்கிக் கப்பல்களையும் தயாரிக்க முடிவு செய்துள்ளார்.
1992ஆம் ஆண்டே இந்திய கடற்படைக்கு 18 டீசல் மூலம் இயங்கும் போர்ககப்பல்களும், 6 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு 2012க்குள் 12 கப்பல்களும், 2030க்குள் 12 கப்பல்களும் வழங்குவது போல திட்டம் வகுக்கப்பட்டிருந்தாலும், இன்று வரை ஒரு கப்பல் கூட இந்திய கடற்படைக்கு வழங்கப்பட வில்லை.
இந்நிலையில் பிரதமர் மோடி இத்திட்டத்தினை மாற்றி அமைத்து, 7 போர்கப்பல்களையும், 6 அதிநவீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களையும் கட்ட முடிவு செய்துள்ளது.
இதில் 7 போர்கப்பல்கள் 4 கப்பல்கள் மும்பையிலும், 3 கப்பல்கள் கொல்கத்தாவிலும் கட்டப்படும் என கூறப்பட்டுள்ளது. அதே போல, 6 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களும் விசாகப்பட்டினத்தில் தயாரிக்கப்பட உள்ளதாம்.

No comments:

Post a Comment