கடந்த 7 ஆண்டுகளாக உலக தமிழர்கள் இணையம் மூலமாகவும், வாக்கு சீட்டு மூலமாகவும் தமிழ்திரை உலகினரை தேர்ந்தெடுத்து எடிசன் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக 2014 ஜனவரி முதல் 2014 டிசம்பர் வரை வெளிவந்த திரை படங்களின் அடிப்படையில் சிறந்த நடிகர், நடிகை, வில்லன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் திரைத் துறை பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவ்வாறு தேர்வானவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் நாசர், அனிருத், ஆதி, ராதாகிருஷ்ணன் பார்த்திபன், அட்லி மற்றும் பல திரை நட்சத்திரங்கள் பங்குபெற்றனர். இவ்விழாவில் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் மூன்று விருதுகளை வென்றது.
இப்படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். சிறந்த இயக்குநருக்கான விருது மெட்ராஸ் பட இயக்குநர். பா. ரஞ்சித்துக்கும், இசையமைப்பாளர் விருது கத்தி படத்திற்காக அனிருத்துக்கும் கிடைத்தது.
சிறந்த காமெடியனாக சதீஷ் "கத்தி" படத்திற்காக பெற்றார். ஜிகிர்தண்டா படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்து, மக்களிடம் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற பாபி சிம்ஹாவுக்கு சிறந்த வில்லனுக்கான விருது வழங்கப் பட்டது.
சிறந்த அறிமுக இயக்குநர் விருது வேலை இல்லா பட்டதாரி பட இயக்குநர் வேல்ராஜுக்குக் கிடைத்தது. சிறந்த அறிமுக நடிகை விருது மெட்ராஸ் நாயகி காத்தரின் தெரசாவுக்கும், சிறந்த நடனஅமைப்பாளருக்கான விருது கத்தி பட பாட்டுக்காக ஷோபிக்கும் கிடைத்தது.
புரோடோட்டானிக் ஐகான் விருது இயக்குநர் திருவுக்குக் கிடைத்தது. ரைசிங் ஸ்டார் விருது தெகிடி நாயகி ஜனனி ஐய்யருக்குக் கிடைத்தது. ரெட்ரோ ஆக்ட்ரஸ் விருது முண்டாசுப்பட்டி படத்துக்காக நந்திதாவுக்குக் கிடைத்தது.

No comments:
Post a Comment