Tuesday, 17 February 2015

தீவிரவாதிகளால் நிறுத்தப்பட்ட ஜெர்மனியின் மாபெரும் திருவிழா…!!


ஜெர்மனியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ப்ரவுன்ஷ்விக் என்ற நகரில் வருடாவருடம் ‘ஷொடுவெல்’ என்ற திருவிழா நடைபெறுவது வழக்கம். ஜெர்மனியின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான இதன் போது, பலர் ஆடம்பரமான, வித்தியாசமான ஆடைகளில் அணிவகுத்து வருவது பார்வையாளர்களுக்கு விருந்தாக அமையும்.
சுமார் 2 லட்சம் பேர் இத்திருவிழாவைக் காண்பதற்காக வருடாவருடம் கூடுவதாக ஜெர்மன் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிற்று கிழமை நடக்க இருந்த இந்த திருவிழாவானது, இஸ்லாமியத் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை அடுத்து நடக்காமல் போனது.
நம்பத்தகுந்த பாதுகாப்பு தகவல்களின் அடிப்படையில், ஜெர்மன் காவலர்கள் இந்த விழா நடைபெறாமல் தடுத்துள்ளனர். அதோடு, அங்கு கார்னிவல் நடைபெறும் இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என்றும், யாரும் ப்ரவுன்ஷ்விக் நகரத்திற்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.
இதற்கு முன் டென்மார்க்கில், இரண்டு பொதுமக்களும், 5 போலீசாரும் தீவிரவாதத் தாக்குதலால் பலியாகினர். இந்த தாக்குதலை அடுத்து ஜெர்மனில் தாக்குதல் நடக்க வாய்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை அடுத்தே ப்ரவுன்ஷ்விக் அணிவகுப்புத் திருவிழா தடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment