அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் அமைந்துள்ள இந்து கோயில் ஒன்றில், விஷமிகள் சிலர் சுவஸ்திக் குறியுடன் ‘கெட் அவுட்’ என்றும் ஸ்பிரே பெயிண்ட் மூலம் எழுதியுள்ளனர். இச்சம்பவம் இந்தியா மற்றும் உலக இந்துக்களை மனவேதனை அடையச் செய்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணம், பொத்தேல்(Bothell) நகரில் அமைந்துள்ள இந்து கோயில் சுமார் 20 வருடங்கள் பழமை வாய்ந்தது. இங்கு இரண்டாம் கட்ட கட்ட சீரமைப்பு வேலைகள் நடந்து வருகின்றன.
அதோடு, நேற்று முடிந்த சிவராத்திர்க்காக சிறப்பு ஏற்பாடுகளும் நாந்து வந்தன. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, மர்ம நபர்கள் சிலர் கோயிலின் வெளிப்புற சுவரில், சுவஸ்திக் குறியுடன் வெளியேறு என்ற வார்த்தையையும் வரைந்துள்ளனர்.
இதைக் கண்ட கோயில் நிர்வாகம், அருகில் உள்ள பொத்தேல் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதைக் கண்ட அந்த பகுதி இந்து மக்கள் அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போத்தெல் நகர போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து கோயில் நிர்வாகி நித்யநிரஞ்சன் கூறுகையில்,
''அமெரிக்கா எந்த மதத்திற்கும் சொந்தமானது அல்ல; பிற நாடுகளில் இருந்து குடியேறியவர்களின் நாடு தான் அமெரிக்கா.”
”எனவே, எங்களை வெளியேறச் சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது.'' என்றார்.
இச்சம்பவம் நடந்த அடுத்த நாள், ஞாயிற்றுக் கிழமை, கோயிலிற்கு சில கட்டிடங்கள் தள்ளி அமைந்துள்ள, பள்ளி ஒன்றில் இதே போல் சுவஸ்திக் குறியுடன் முஸ்லிம்கள் வெளியேற வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.
இச்சம்பவத்திற்கு அமெரிக்காவில் வாழும் மற்ற மதத்தவர்களும், மதச்சார்பற்றவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதே போல், இந்தியாவிலும் இச்சம்பவங்களுக்கு பெரும் கண்டனம் எழுந்துள்ளது.
அண்மையில், இந்தியா வந்து திரும்பிய அமெரிக்க அதிபர் ஒபாமா, மதத்தின் அடிப்படையில் பிளவுபடாத வரையில் இந்தியாவின் வெற்றிகள் தொடரும் என்றும், இந்தியாவில் மத சகிப்புத்தன்மையின்மையால் நடந்த சம்பவங்களை மகாத்மா காந்தி கண்டிருந்தால் கடும் அதிர்ச்சி அடைந்திருப்பார் என்றும் கூறினார்.
இதை அடுத்து நடந்துள்ள இச்சம்பவம், இந்திய கட்சியினர் மற்றும் முற்போக்கு வாதிகளிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment