Tuesday, 17 February 2015

செவ்வாய்க்கு சென்று வாழ்கையைத் தொடங்க இருக்கும் முதல் இந்தியர்கள்…!!


நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம், செவ்வாயில் மனிதர்களின் வசிப்பிடமாக்கும் முயற்ச்சியில் இறங்கியுள்ளது. இதற்காக, பூமியில் இருந்து மனிதர்களை, ஆராய்ச்சிக்காக செவ்வாய்க்கு அனுப்ப இருக்கிறது.
இதற்காக 2024ம் ஆண்டு மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த செவ்வாய் பயணத்திற்கு விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்திருந்த நிலையில், உலகெங்கிலும் இருந்து சுமார் 2.5 லட்சம் பேர் செவ்வாய் செல்வதற்கு விண்ணப்பித்தனர்.
இந்த 2.5 பேரில் 100 பேரை மட்டும் இந்நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது. 50 ஆண்கள் 50 பெண்கள் என்று தேர்தெடுத்துள்ள இப்பட்டியலில், 39 பேர் அமெரிக்கர்கள். 31 ஐரேப்பியர்கள், 16 ஆசியர்கள், 7 ஆப்பிரிக்கர்கள், 7 ஓசனியாவைச் சேர்ந்தவர்கள். இதில் 3 பேர் இந்திய வம்சாவழியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று பேர், 19 வயது ஷ்ரதா பிரசாத், 29 வயது ரிதிகா சிங், மற்றும் 29 வயதான தரனீத் சிங்க் பாதியா ஆகியோர் ஆவர். இதில், ரிதிகா சிங்கும், தரனீத் சிங்கும் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவழியினர். ஷ்ரதா பிரசாத் கேரளாவைச் சேர்ந்தவர்.
19 வயதான இவர், கோயமுத்தூர், அமிர்தா பல்கலைக் கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில்,
”2.5 லட்சத்திற்கு அதிகமானவர்களில் நான் தேர்வு செய்யப்பட்டுள்ளது எனக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.” ”நான் தேர்வு செய்யப்பட்டதை அறிந்ததில் இருந்து என் நண்பர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சியாக உள்ளனர்.”
”இது போன்ற ரிஸ்க்கான செயல்களில் ஈடுபடுவது குறித்து முதலில் என் பெற்றோர் பயந்தனர்.”
”ஆனால் இதன் நடைமுறைகள் பற்றி தெரிந்ததால் இப்போது சந்தோஷப்படுகிறார்கள்.”
”தொடர்ந்து 3வது மற்றும் 4வது சுற்று நேர்முக தேர்வுகளிலும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.”
“இறுதி பட்டியலிலும் இடம்பெறுவேன் என நம்புகிறேன்.” “செவ்வாய்க்கு சென்று, அங்கு குடியேறவும் திட்டமிட்டுள்ளேன்.”
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த 100 பேரில், 24 பேரை மட்டுமே இந்நிறுவனம் செவ்வாய்க்கு அனுப்ப உள்ளது. இதற்காக 3வது மற்றும் 4வது கட்ட தேர்வுகள் தொடர்ந்து நடைபெரும் என்று தெரிவிக்கப்படுகிறது.
4 சுற்றுகளிலும் தேர்ந்தவர்களுக்கு செவ்வாயில் வாழ்வதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இத்திட்டப்படி ஒரு முறை செவ்வாய்க்குச் சென்றால் மீண்டும் பூமிக்கு வரவே முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment