Wednesday, 4 February 2015

வெளிநாட்டுக்கு அனுப்பவதாக இலங்கை அகதிகளிடம் பண மோசடி செய்த இயக்குநர்…!!


இலங்கை அகதிகள் சிலரிடம் கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சென்னையைச் சேர்ந்த ஒருவர் பண மோசடி செய்துள்ளார். இலங்கை, வவுனியாவைச் சேர்ந்தவர் செல்வராஜா.
இவரது அனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு மகேஸ்வரி என்று ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக, கடந்த 2007ம் ஆண்டு, குடும்பத்துடன் அகதிகளாக தமிழ்நாடு வந்துவிட்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள பவானிசாகர் அகதிகள் முகாமில் தங்கி வந்தனர். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை காலை நாம் தமிழர் கட்சியினர் சிலரின் உதவியுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
இந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 2009ஆம் ஆண்டில் ராஜ்கபூர் என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் சென்னையில் சினிமா இயக்குநராக இருப்பதாக கூறினார். கனடாவில் தெரிந்தவர்கள் மூலம் வேலை வாங்கித் தருவதாகவும், கனடாவுக்கு அனுப்பி வைப்பதாகவும் ராஜ்கபூர் கூறினார்.
அதை நம்பி நான் உட்பட 3 பேர் மொத்தம் 10 இலட்சம் இந்திய ரூபாயை ராஜ்கபூர் மற்றும் அவரது உறவினர் ஜெகன் ஆகியோரிடம் கொடுத்தோம். ஆனால் அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு எங்களை ஏமாற்றிவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
இந்த புகாரின் பேரில், ராஜ் கபூர் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment