தற்போது தல அஜித்தை வைத்து ’என்னை அறிந்தால்’ படத்தை இயக்கியுள்ள கௌதம் மேனன் விரைவில் தளபதி விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறாராம்.
என்னை அறிந்தால் படம் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி ரிலீஸாக இருப்பதால் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் கெளதம் மேனன். சமீபத்தில் பிரபல மலையாள வார இதழ் ஒன்றிற்கு பேட்டயளித்த கெளதம் மேனன் விஜய் நடிக்கும் ‘யோஹன் : அத்தியாயம் ஒன்று’ படத்தை விரைவில் படமாக்க இருப்பதாக கூறியுள்ளார்.
இந்தப்படத்தை சில வருடங்களுக்கு முன்பே கெளதம் மேனன் இயக்குவதாக இருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. இந்நிலையில் இப்படம் கைவிடப்பட்டதற்கான காரணம் குறித்து சமீபத்திய பத்திரிகை ஒன்றிற்கு பதிலளித்திருக்கிறார் கௌதம் மேனன்.
இப்படத்தின் கதை பெரும்பாலும் லண்டனில் நடப்பது மாதிரி தான் கௌதம் மேனன் எழுதி வைத்திருந்தாராம். லண்டனில் நடப்பது மாதிரியான கதை என்பதால் படத்தில் நிறைய ஆங்கில வசனங்கள் வருகிறதாம்.
இதனை தமிழ் சினிமா ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என நினைத்ததாலேயே விஜய் இப்படத்திலிருந்து விலகினாராம். ஆனால் ‘யோஹன் : அத்தியாயம் ஒன்று’ கதை கைவிடப்படவில்லை என்றும், அந்த கதையில் சில மாற்றங்களை செய்து விரைவில் படமாக்க இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார் கௌதம் மேனன்.

No comments:
Post a Comment