உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய 14வது போட்டியில் இங்கிலாந்து அணியும் மற்றும் ஸ்காட்லாந்து அணியும் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஒவர்கள் முடிவில் 8விக்கட்டுக்களை இழந்து 303 ரன்களை எடுத்தது. இதில் இங்கிலாந்து அணி சார்பாக மிகத் திறமையாக விளையாடிய மொயின் அலி 128 ரன்களையும், இயன் பெல் 54 ரன்களையும் எடுத்தனர்.
மேலும் பின்வரிசை ஆட்டக்காரர்களான கேரி பேலன்ஸ் (10) ரன்களையும், மோர்கன் (46) ரன்களையும், டெய்லர் (17) ரன்களையும், பட்லர் (24) ரன்களையும் பெற்று இங்கிலாந்து அணி கடினமான இலக்கை எட்டக்கூடிய நிலைமை ஏற்பட்டது.;
ஸ்காட்லாந்து அணியின் பந்துவீச்சில் ஜோஷ்டெவி ஆகக் கூடுதலாக 4விக்கட்டுக்களை வீழ்த்தினர். பின்னர் 304 என்ற கடின இலக்கை நோக்கி ஆடிய ஸ்காட்லாந்து அணி 42.2 ஒவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 184 ரன்களை மட்டுமே பெற்றது.
இதனை அடுத்து இங்கிலாந்து அணி 119 ரன்களால் மாபெரும் வெற்றியை பெற்றது ஸ்காட்லாந்து அணியின் ஆட்டத்தில் பிரகாசித்த கோயிட்டசா அதிகூடிய ரன்களாக 71 ரன்களை எடுத்திருந்தார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் பின் 3விக்கட்டுக்களையும் , ஆண்டர்சன் ,வோக்ஸ், மொயீன் அலி ஆகியோர் தலா 2விக்கட்டுக்களையும், ஜோரூட் 1விக்கட்டையும் வீழ்த்தினர்.
ஸ்காட்லாந்து அணிக்கெதிராக ஆட்டத்திலும், பந்துவீச்சிலும் பிரகாசித்த இங்கிலாந்து அணியின் ஆரம்ப ஆட்ட வீரர் மொயீன் அலி இன்றைய போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

No comments:
Post a Comment