நாம் இதுவரை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிஞ்சிப் பூ பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சமூக தளங்களில் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவின் இமயமலைப் பகுதிகளில் நரிலதா என்ற மலர் பூப்பதாக செய்திகள் பரவி வருகிறது.
நரிலதா என்பது பெண்ணைக் குறிப்பதாம். இதன் மலர்கள் ஒரு பெண்ணின் உருவம் போன்று இருக்கும் என்று செய்திகள் பரவி வருகிறது. சரி இதைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் என்று இணையத்திற்கு சென்று பார்த்தால், இது தொடர்பான புகைப்படங்கள் மூன்று அல்லது நான்கைந்து புகைப்படங்கள் தான் இருக்கின்றன. மேலும் இது பற்றி எந்த ஒரு தகவல்களும் இல்லை.
ஒரு சிலர் போட்டிருக்கின்றனர், அவர்களில் சிலர் இதே புகைப்படங்களை வைத்துக் கொண்டு தாய்லாந்தில் பூப்பதாகவும், சிலர் இலங்கையில் பூப்பதாகவும் கூறிவருகிறனர். இந்நிலையில் அந்த புகைப்படங்கள் உண்மையில் எடுக்கப்பட்டதா இல்லை ஃபோட்டோ ஷாப் மூலம் எடிட் செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்து கொண்டுதான் இருக்கின்றது. பார்ப்பதற்கு ஒரு பெண் ஆடையின்றி இருப்பது போல் இருக்கும் இந்த நரிலதா மலர் பற்றி எந்த ஒரு இயற்கை ஆய்வாளர்களும் எந்த ஒரு தகவலையும் கூறியதில்லை.

No comments:
Post a Comment