Sunday, 22 February 2015

லிங்கா பிரச்சினையில் புதிய திருப்பம்.. விஜய் புகைப்படத்தால் பரபரப்பு..!


ரஜினி நடிப்பில் வெளிவந்த ’லிங்கா’படத்தால் நாங்கள் நஷ்டம் அடைந்து விட்டோம் என்று ஒவ்வொரு நாளும் போராட்டங்கள், நடத்தி வருகின்றனர்விநியோகஸ்தர்கள்.
இப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதமாக தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் லிங்கா விநியோகஸ்தர்கள் தரப்பில் வைக்கப்பட்டிருந்த நஷ்ட ஈடு கோரிக்கைக்கு, தன்னால் 10% மட்டுமே தரமுடியும் என்று கூறினார். எனினும் அது போதாது என்றும், ரஜினி இப்பிரச்சினையில் தலையிட வேண்டும் என்றும் இல்லையென்றால் போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டு முன்பு மெகா பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த போவதாக மிரட்டல் விடுத்திருந்தனர்.
மேலும் விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து வைக்கப்பட்ட பத்திரிக்கையாளார் சந்திப்பில், "ரஜினியை நஷ்ட ஈடு கொடுக்காதீர்கள். நீங்கள் கொடுத்தால் நாங்களும் கொடுக்க வேண்டும். நீங்கள் நஷ்டத்திற்கு பணம் கொடுத்து பழகி விட்டீர்கள், எனவே தான் உங்களின் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் நெருக்கடி தருகிறார்கள்.
மேலும் இதே நிலை தொடர்ந்தால் மற்ற நடிகர்களும் பாதிக்கப்படுவோம். ரஜினியே கொடுத்து விட்டார் நீங்கள் தாருங்கள் என கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்று இரண்டு நடிகர்கள் தடுக்கிறார்கள்" என கூறினார்கள். அந்த நடிகர்கள் யார் என்று கேட்டபோது பதில் சொல்ல மறுத்துவிட்டார்கள்.
ஆனால் கோடம்பாக்கத்து வட்டாரத்தில் இந்த கேள்வியை முன் வைத்தவர்கள் சரத்குமார் , இன்னொருவர் விஜய் என கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
இது குறித்து விஜய் தரப்பிடம் கேட்டபோதுபோது, "விஜய் தற்போது 'புலி' படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அவரை இழுத்தால் பிரச்சினை பெரிதாக ஆகிவிடும் என்று நினைக்கிறார்கள். விஜய் எப்போதுமே யாருடைய பிரச்சினையிலும் தலையிட மாட்டார். விஜய்க்கும், 'லிங்கா' விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமில்லை" என்று மறுத்தனர்.
இந்த நிலையில் தான் விஜய்யின் ஒரு புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. அந்த புகைப்படத்தில் விஜய்யும், இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணமாக கருதப்படும் சிங்காரவேலனும் நெருங்கி உள்ள படி இருக்கிறார்கள். இந்த ஒரு புகைப்படத்தால் இதில் விஜய்க்கு சம்மந்தம் இருக்குமோ என்று கேள்வி எல்லோர் மனதிலும் எழும்பியுள்ளது.
ஏற்கனவே விஜய்க்கு இதில் தொடர்பு இருக்கா என்ற கேள்விக்கு இரண்டு தரப்பிலும் மறுத்தனர். இந்நிலையில் இந்த புகைப்படத்தால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment