Monday, 23 February 2015

ஜெ., கடிதம், கனி தூண்டுதல், சுஷ்மா முயற்சி – நாடு திரும்பிய தமிழக பாதிரியார்…!!


ஆப்காணிஸ்தானில் தீவிரதிகளல் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார், 8 மாதங்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளார். சிவகங்கை, தேவக் கோட்டையைச் சேர்ந்த வர் அலெக்ஸிஸ் பிரேம் குமார்.
கிறிஸ்துவ பாதிரியாரான இவர், ஆப்கானிஸ்தான் சென்று, ஜே.ஆர்.எஸ். தொண்டு நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 2ம் நாள், ஹெராத் மாகாணத்தில் இவர் கடத்தப்பட்டார்.
இந்த தகவல் அறிந்தவுடன் தமிழகத்தில் இவரை காப்பாற்ற வேண்டும் என்று அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, மோடிக்கு கோரிக்கை விடுத்தார். அலெக்சிஸ் பிரேம் குமாரை ஆப்கானிஸ்தானிய தீவிரவாதிகளிடமிருந்து பத்திரமாக மீட்டுத் தர வேண்டும் என்று மோடிக்கு கடிதம் எழுதினார் ஜெயலலிதா.
இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் இந்தியத் தூரக அதிகாரிகள், ஆப்கான் அரசோடு இணைந்து அலெக்சிஸ் பிரேம் குமாரை மீட்கும் முயற்சியில் இறங்கினர். இந்த முயற்சியின் பயனாக, அலெக்ஸிஸ் கடத்தப்பட்டு, 4 நாட்கள் கழித்து, 3 தாலிபான் தீவிரவாதிகளை அதிகாரிகள் கைது செய்தனர்.
இருந்தும், அவரை மீட்ட பாடில்லை. இப்படி அப்படி என்று 2 மாதங்கள் உருண்டோடின. இதை அடுத்து மீண்டும் பிரேம் குமாரை சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஒரு குரல் தமிழக ராஜ்யசபாவில் ஒலித்தது. இந்த குரலைக் கொடுத்தவர் தி.மு.க., எம்.எல்.ஏ., கனிமொழி தான்.
2 மாதங்கள் கடந்தும், அலெக்ஸிஸ் பிரேம் குமாரை மீட்க அரசு சரியான நடவடிக்கை எடுக்க வில்லை. அதனால் தான் அவரை மீட்க முடியவில்லை என்று கூறினார் கனி. இந்த அரசு தமிழக அரசு மட்டும் இல்லை, மத்திய அரசையும் சேர்த்துத் தான்…
இதனால் இந்த கேள்விக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவரராஜ், அலெக்ஸ் பிரேம் குமாரை மீட்க அரசால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகக் கூறினார்.
இதை அடுத்து எட்டு மாதங்கள் கழித்து நேற்று தான் அலெக்ஸிஸ் பிரேம் குமார், தீவிரவாதிகளிடம் இருந்து, மீட்டு இந்தியா வந்து சேர்க்கப்பட்டுள்ளார். அலெக்ஸிஸை மீட்டுத் தந்த இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கு அவரது உறவினர்கள் நன்றி கூறினர்.

No comments:

Post a Comment