Thursday, 19 February 2015

கடலில் விட்டதை கண்மணியில் பிடிப்பாரா..?


தமிழ் திரையுலகில் பிரபல இயக்குநராக இருப்பவர் மணிரத்னம். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மானை திரை உலகுக்கு அறிமுகப்படுத்தியது இவர் தான். இவர் இயக்கிய ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு வகையில் வெவ்வேறு காரணங்களுக்காகத் தனித் தன்மையுடன் திகழ்கின்றன. ஆனால் இவர் கடைசியாக இயக்கிய இரண்டு படங்களும் தோல்வியில் முடிந்தது.
இதனால் மணிரத்னம், எங்கு இருக்கிறார், என்ன செய்துக்கொண்டிருக்கிறார் என்று எல்லோரும் தேடிக்கொண்டிருந்தனர். அப்போதுதான் மணிரத்னம் சைலண்டாக ஒரு படத்தை இயக்கிவருகிறார் என்றும் அந்த படத்திற்கு ‘ஓ.கே.கண்மணி' என பெயர் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதாகவும், படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான்-நித்யா மேனன் ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடித்து வருகின்றனர். பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். மௌன ராகம், அலைபாயுதே பாணியிலான காதல் கதையாக இந்த ஓகே கண்மணி உருவாகி வருகிறது என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே இரண்டு தோல்விகளால் துவண்டு கிடக்கும் மணிரத்னம் இந்தப் படம் மூலம் எழுச்சி பெறுவாரா என்பதுதான் ரசிகர்களின் ஆவலாக இருக்கிறது.

No comments:

Post a Comment