Thursday, 19 February 2015

இப்படியும் ஒரு தொழில்... விண்ணப்பம் கோருகின்றனர்..!


அந்தாட்டிக்காவில் –10 பாகை செல்சியஸிலும் குறைந்த உறை குளிரான காலநிலை நிலவும் தீவு ஒன்றிலிலுள்ள உலகின் மிகவும் பின்தங்கிய தபால் அலுவலகத்தில் ஊழியராக கடமையாற்றுவதற்கு பொருத்தமான விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கோடியர் தீவிலுள்ள மேற்படி தபால் அலுவலகத்தில் கடமையாற்றுபவர்கள் துர்நாற்றம் வீசும் 2000 பென்குயின்களுக்கு மத்தியில் வாழ நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் வழுக்கும் பாறைகள், பனிக் குவியல்கள் என்பவற்றில் மிகவும் பாரமான பெட்டியொன்றை தூக்கிச் செல்லக் கூடியவர்களாக இருப்பது அவசியம் என கோரப்பட்டுள்ளது.
உறை குளிர் காலநிலை நிலவும் தீவுக்கு ஹெலிகாப்டர் வசதியில்லாததால் அருகிலுள்ள மருத்துவ வசதியைப் பெற கப்பலொன்றில் 3 நாட்கள் பயணத்தை மேற்கொள்ள நேரிடும் எனவும் இணையத் தள வசதியோ வெப்பமூட்டல் வசதியோ தொலைத்தொடர்பாடல் வசதியோ இல்லாத அந்தத் தீவில் தொலைபேசி சிக்னல்களும் பெற்றுக் கொள்ள முடியாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரி, அந்தத் தீவின் போர்ட் லொக்ரோய் எனும் இடத்தில் கோடை காலம் மாதங்களான நவம்பர் மற்றும் மார்ச் சில் கடை, அருங்காட்சியகம், தபால் அலுவலகம் மற்றும் பராமரிப்பு நிலையம் என்பவற்றை செயற்படுத்த வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி வேலை வாய்ப்பு விளம்பரமானது பிரித்தானிய அண்டார்டிக்கா பாரம்பரிய நம்பிக்கை நிதியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பிப்பதற்கான இறுதி தினம் எதிர்வரும் 27 ஆம் தேதியாகும். மாத ஊதியம் 1100 ஸ்ரேலிங் பவுணாகும். அந்த தீவில் பணிபுரிபவர் இருளை ஒருபோதும் காணமுடியாது. 24 மணி நேரமும் அங்கு சூரிய ஒளி உள்ளமை குறிப்பிடத்தக்கது. போர்ட் லொக்ரோய் பிரதேசத்திற்கு கோடை காலத்தில் சுமார் 18,000 சுற்றுலா பயணிகள் பயணம் செய்வது வழமையாகவுள்ளது.

No comments:

Post a Comment