Monday, 23 February 2015

சிக்ஸர்களாக சிதறிய பந்து..! உலகக் கோப்பை வரலாற்றில் கெய்லின் சாதனை!!


உலகக் கோப்பை போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிற்ஸ் கெய்ல் இரட்டை சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
உலகக் கோப்பை போட்டியின் 15வது லீக் ஆட்டமான இன்று மேற்கிந்திய தீவுகள் அணியும், ஜிம்பாவே அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய ஸ்மித் டக் அவுட் ஆக, தொடர்ந்து களமிறங்கிய சாமுவேல்ஸ் மற்றும் கிற்ஸ் கெய்ல் அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். இதில் கிற்ஸ் கெய்ல் 147 பந்துகளுக்கு 215 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். உலகக் கோப்பை வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார். அதே போல உலகக் கோப்பை பாட்னர்ஷிப்பில் அதிகபட்ச ரன்னாக கெய்ல் மற்றும் சாமுவேல்ஸ் இணை 372 எடுத்ததும் புதிய சாதனை ஆகும்.
இதற்கு முன்பாக கிறிஸ்டன் 159 பந்துகளுக்கு 188 ரன்கள் அடித்து முதலிடத்தில் இருந்தார். கெய்ல் தற்போது அவரை பின் தள்ளியுள்ளார். இவர்களைத் தொடர்ந்து இந்தியாவின் கங்குலி 183 ரன்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
50 ஓவர்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 372 ரன்கள் எடுத்துள்ளது.

No comments:

Post a Comment