Monday, 23 February 2015

இனிமே இப்படி சிலுவையிலல்லாம் அடிச்சுக்கக் கூடாது…!! சரியா..??


ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த உலகத்திலேயே யாரும் செய்யாத ஒரு வித்தியாசமான வேண்டுதலை செய்துள்ளார் கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி.
இந்த சம்பவம் தமிழகாமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதா தரப்பு சொல்லித் தான் கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி இவ்வாறு செய்தார் என்று சிலர் கூறுகின்றனர்.
இதற்கு ஷிகான் ஹுசைனி மறுப்பு தெரிவித்துள்ளார். சிலுவை மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக, குடும்பத்தினரை எதிர்த்து, தாமாக செய்த கொண்ட ஒன்று தான் என்று கூறியுள்ளார் ஷிகான்.
இந்நிலையில், ஷிகான் ஹுசைனுக்கு, எதற்காகவும் திரும்ப இப்படி ஆபத்தான செயலைச் செய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டு அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஜெய்லலிதா வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
”நான் மீண்டும் தமிழகத்தின் முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக, நீங்கள் உங்களை வருத்திக் கொண்டு சிலுவையில் அறைந்து கொண்ட செயல், என்னை ஆழ்ந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.”
“உங்களுடைய ஆதரவை எதிர்பார்த்தாலும், எல்லையை தாண்டி இதுபோன்று உங்களை வருத்திக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.”
“என் மீது நீங்கள் காட்டிய அக்கறைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.”
”இனியொரு முறை இத்தகைய அபாயகரமான நடவடிக்கைக்கைக்கு செல்ல வேண்டாம்.”
“உங்கள் உடல் நலனைப் பார்த்துக் கொள்ளவும். இவ்வாறு ஜெயலலிதா கூறி உள்ளார்.”

No comments:

Post a Comment