டைனோசர்கள் உலகில் வாழ்ந்ததாக கூறப்படுவது பொய் என பிரிட்டனிலுள்ள ஒரு அமைப்பினர் கூறிவருகின்றனர்.
டைனோசர்களுக்கு எதிரான கிறிஸ்தவர்கள் எனும் இந்த அமைப்பில் சுமார் 4000 அங்கத்தவர்கள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். 65 மில்லியன் வருடங்களுக்கு முன் டைனோசர்கள் பூமியில் வாழ்ந்ததாக கருதப்படுகிறது.
ஆனால், இது வெறும் 65 மில்லியன் வருட கால பொய் என மேற்படி அமைப்பினர் கூறுகின்றனர்.
இந்த அமைப்பில் அங்கத்தவராக உள்ள பெண்ணொருவர் பள்ளிகளின் பாடப்புத்தகங்களிலிருந்து டைசனோர்கள் பற்றிய விசயங்கள் நீக்கப்பட வேண்டும் என பள்ளி தெரிவித்துள்ளமை சர்வதேச ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ளது.

No comments:
Post a Comment