இந்தியா பாகிஸ்தான் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்குமே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது நேற்று முடிந்த உலகக் கோப்பை இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம். நேற்றைய ஆட்டத்தோடு சேர்த்து இது வரை இந்தியாவும் பாகிஸ்தானும் 6 முறை உலகக் கோப்பை தொடரில் மோதியுள்ளன.
இந்த ஆறு முறையுமே இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும், நேற்றைய ஆட்டத்திற்கு முன், இந்த 6 ஆட்டத்தி அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையை பாகிஸ்தான் வீரர் சாயீத் அன்வர் தான் பெற்றிருந்தார்(101).
இந்திய வீரர் ஒருவர் கூட இதற்கு முன் நடந்த 5 போட்டிகளில் சதம் அடித்ததில்லை (டெண்டுல்கர் தான் அதிகபட்சமாக 98 ரன்கள் எடுத்திருந்தார்). இந்த சாதனையை தகற்த்து இந்தியா பாகிஸ்தான் உலகக் கோப்பை தொடரில் முதல் சதம் அடித்த பெருமையையும் அதிக ரன் குவித்த பெருமையையும் பெற்றார் விராத் கோஹ்லி.
இதனால், இந்த முறை நடந்த இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை தராமல் கொண்டாட்டத்தை தந்தது. இந்த வெற்றியை வெளிப்படுத்தும் விதமாக ஃபேஸ்புக் கிரிக்கெட் வாசிகள் பாகிஸ்தானியர்களை வெருப்பேற்றும் வண்ணம் படங்களுடன் கமெண்டுகளைப் போட்டு ஃபேஸ்புக் கலாய் போரைத் துவங்கி விட்டனர்.
இந்த படங்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். ஆட்டத்துக்கு முந்தைய சில படங்களும் இதனுடன் சேர்க்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment