Monday, 23 February 2015

’இந்தியாவுடன் தோற்றது அவமானம்.. டி வில்லியர்ஸ்..!


உலகக் கோப்பை போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் 130 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது தென் ஆப்ரிக்கா அணி.
இது மிகவும் அவமானமான ஒரு விஷயம் என்று அந்த அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
’130 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது மிகவும் அவமானமான விஷயம். இது எனக்கு மிகவும் மனவருத்தத்தை அளிக்கின்றது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்ததே எங்களுக்கு பெரிய இழப்பு தான்.
இந்தியா பேட்டிங் செய்த போது, 350 ரன்கள் அடித்து விடுவார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் எங்கள் வீரர்கள் ஒருவழியாக அவர்களை சமாளித்து 307 ரன்களுக்குள்ளாகவே சுருட்டி விட்டோம். என்றாலும், மெல்போர்ன் போன்ற பெரிய மைதானத்தில் அதிகபட்சம் 275 ரன்கள் தான் சேசிங் செய்யக் கூடியதாக இருக்கும்.’ என்று கூறியுள்ளார்.
மேலும், ‘இந்திய அணியின் ஃபீல்டிங் அபாரமாக இருந்தது. அவர்கள் ஒரு ஒருங்கிணைந்த டீமாக செயல்பட்டனர்.’ என்றும் கூறினார்.

No comments:

Post a Comment