Monday, 23 February 2015

இந்த வார Box Office..! 6 வாரங்கள் முடிந்தும் டாப் 5-ல் ஐ படம்..!


இந்த வார பாக்ஸ் ஆபிஸில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அனேகன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதேபோல், என்னை அறிந்தால் படமும் வெளிவந்து 3 வாரம் ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் இடம்பிடித்துள்ளது. கடந்த வாரம் வெளியான தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தம், சண்டமாருதம் படமும் பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்துள்ளன. பொங்கலுக்கு வெளிவந்த ’ஐ’ படமும் இன்னும் பாக்ஸ் ஆபிஸில் இடம்பிடித்துள்ளது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.
இந்த வார சென்னை பாக்ஸ் ஆபிஸில் நிலவரம்...
சென்றவார இறுதியில் 92.6 லட்சங்களை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் உள்ளது தனுஷின் அனேகன் படம். இதுவரை மொத்த வசூல் சென்னையில் மட்டும் 3.01 கோடிகளை குவித்துள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக அஜித்தின் என்னை அறிந்தால் படம் உள்ளது. சென்ற வார இறுதியில் 30.8 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை 5.71 கோடிகளை குவித்துள்ளது. கடந்த வாரம் வெளிவந்த தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் படம் மூன்று நாட்களில் 26.06 லட்சங்களை வசூலித்து 3 -வது இடத்தில் உள்ளது.
சரத்குமார் இரு வேடங்களில் நடித்துள்ள சண்டமாருதம் மூன்று நாட்களில் 10.7 லட்சங்கள் வசூலித்துள்ளதாம். பொங்கலுக்கு வெளியான ஐ படம் இன்னும் பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் ஐ படம் 2.13 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. வெளியாகி ஆறு வாரங்கள் முடிந்தும் டாப் 5 -இல் இடம்பெற்றிருப்பது ஒரு சாதனைதான்.

No comments:

Post a Comment