Monday, 2 February 2015

விக்ரமின் மகளா டிடி..?


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’காஃபி வித் டிடி’யில் காஃபி கொடுத்தே எல்லா பிரபலங்களிடம் இருந்தும் பதில்களை லாவகமாக வாங்குவதில் கெட்டிக்காரர் டிடி.
இவருடைய பேச்சும், இவர் அடிக்கும் கமெண்ட்டுக்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது. அதுவும் இவர் நடத்தும் நிகழ்ச்சிகளை பார்க்கின்றார்களோ.. இல்லையோ.. இவர் அடுக்கும் கமெண்ட்டுக்களை பார்க்கவே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கு.
இவர் சமீபத்தில் தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றில் இந்த வருடத்தின் சிறந்த தொகுப்பாளர் என்ற விருதை வாங்கினார். அதன் பின் பேட்டியளித்த அவரிடம் விக்ரம், விஜய் பற்றி கேட்கையில் ‘விக்ரம் என்னுடைய அப்பா மாறி. அவர் என்னை மகள் என்று தான் அழைப்பார், அதேபோல் என்னையும் அப்பா என்றே கூப்பிட சொல்வார் என்று கூறினார்.
மேலும், விஜய் அண்ணாவை சந்தித்த போது நீங்கள் படம் மட்டும் நடிங்கன்னா நாங்க அது ஹிட் செய்வோம் என்று பேசினேன், இவர்கள் என் குடும்பம் போல’ என்று கூறினார் டிடி.

No comments:

Post a Comment